தெலுங்கு டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாலகிருஷ்ணா. இவருக்கு வயது 61 ஆகிறது, இவர் நடிப்பில் அகண்டா திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது 107-வது படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். இவர் நடனம், சண்டைக் காட்சி, கண்ணசைவில் புயலை வரவைப்பது என்று சக்திமான் போல் பல வித்தைகளை காண்பிப்பார். பாலகிருஷ்ணன் அதிபயங்கரமான நடனத்திற்கு தெலுங்கில் அதிக ரசிகர்கள் உண்டு.
61 வயதிலும் தனக்கு எந்த ஜோடி போட வேண்டும் என்பதை அவரே தான் முடிவு செய்வாராம். அப்படி மறுத்து விட்டால் அவர்கள் சினிமாவை விட்டு விலகி விட வேண்டிய தான். அந்த வகையில் ஸ்ரேயா, பிரியாமணி, ராய்லட்சுமி, சிம்ரன், சினேகா, நயன்தாரா, திரிஷா என அனைத்து முன்னணி நடிகைகளுடன் நடித்துவிட்டார்.
தற்போது மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வரலட்சுமிடம் கேட்டுள்ளனர், ஆனால் கால்ஷீட் பிரச்சினை இருப்பதாக முடியாது என்று தெரிவித்து விட்டாராம். தற்போது த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வருகின்றனர் படக்குழுவினர்.
![trisha](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/03/trisha-cinemapettai-1-1.jpg)