சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வரலட்சுமிக்கு சரியாக வழி காட்டவில்லை.. புலம்பிய சரத்குமார்!

தமிழில் பல்வேறு வெற்றிப்படங்களின் நாயகனாக நடித்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அரசியல் சினிமா என இருபெரும் துறைகளிலும் அறியப்பட்ட நபர் இவர். அ.இ.ச.ம.க என்கிற ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.

இவ்வாறு சினிமாவில் அசைக்க முடியாதவராக எளிதில் எவருக்கும் வாய்ப்பு பெற்றுத்தரும் அளவிற்கு இருந்த சரத். “சாய் வித் சித்ரா”என்கிற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார்.

அப்போது நடிகை வரலட்சுமியின் சினிமா வாழ்க்கை குறித்து பேசுகையில் “தான் வழிகாட்டி இருந்தால் இன்னும் மேம்பட்டிருக்கலாம்” என குறிப்பிட்டிருந்தார்.

“போடா போடி” படத்தில் அறிமுகமாகி, பாலாவின் “தாரைதப்பட்டை”, விஜயுடன் “சர்க்கார்”என தமிழிலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார் வரலட்சுமி.

வழக்கத்திற்கு மாறாக படத்திற்கான அர்ப்பணிப்பில் அதிகம் கவணம் செலுத்துபவர் தான். இவை எல்லாவற்றையும் கடந்து சினிமாவில் அவர் நுழைவதறகான வாயிலாக இருந்தவர்கள் ராதிகா சரத்குமாரும் வரலட்சுமியின் அம்மாவும் தானாம்.

கடைசி வரை சினிமாவிற்கு வரலட்சுமி வர வேண்டாம் என்றே கூறி வந்தாராம் சரத்குமார். இதற்காக இப்போது அவர் வருத்தப்படுகிறாராம். வராமலே போயிருந்தால் வரலட்சுமியின் வரம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்காது போலும்.

varalaxmi-sarathkumar
varalaxmi-sarathkumar

Trending News