திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒல்லியாக மாறிய வரலட்சுமி சரத்குமார்.. வைரல் போட்டோ

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் முக்கியமாக குணச்சித்திர வேடங்களில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர் வெற்றியை பெற்று வருகின்றனர்.

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் கிராக் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் வரலட்சுமியின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி எப்போதுமே தன்னுடைய உடல் எடையை பற்றி கவலைப்படாமல் இருப்பார். ஆனால் தற்போது தனக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது என்பதை உணர்ந்து சமீபகாலமாக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்ததால் ஓல்லியாக மாறிய வரலட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. யாரும் எதிர்பார்க்காத வகையில் எலும்பும் தோலுமாய் மாறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வரலட்சுமி நடிப்பில் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாகாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதில் சில படங்களில் சோலோ ஹீரோயின் வேடங்களிலும் நடித்துள்ளார்.

நடித்தால் ஹீரோயின்தான் என்று பல நடிகைகள் தங்களுடைய கேரியரை காலி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதுமென நினைத்த வரலட்சுமி தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்து உற்சாகமாக வலம் வருகிறார்.

varalaxmi-cinemapettai
varalaxmi-cinemapettai

Trending News