வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வாரிசு நடிகை வைத்த நைட் பார்ட்டி.. மகுடிக்கு மயங்கிய பாம்பான ஹீரோக்கள்

போட்டி நடிகை எல்லாம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அளவுக்கு காண்டாக்கிக் கொண்டிருக்கிறார் வாரிசு நடிகை. அவரைப் பார்த்த டாப் ஹீரோயின்கள் காதில் புகை வராத அளவுக்கு இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அம்மணி அடுத்தடுத்ததாக டாப் ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி வருவது தான். அம்மாவைப் போலவே தானும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியம்.

அதற்காகவே தற்போது அவர் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறாராம். அதன் பலன் தான் தற்போது டாப் ஹீரோக்களின் படங்களை அவர் கைப்பற்றுவது.

இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் அம்மணி சூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஒரு அலப்பரையும் இல்லாமல் இருக்கிறாராம். பெரிய குடும்பத்து பெண் பந்தாவாக இருப்பார் என அங்குள்ளவர்கள் நினைத்திருக்கின்றனர்.

ஆனால் அப்படி இல்லாமல் எதார்த்தமாக பழகுவது தேவையானதை நடித்துக் கொடுப்பதை என ஆச்சரியப்படுத்துகிறாராம். இப்படி அமைதியாக இருப்பவர் ஆறு மணிக்கு மேல் வேற அவதாரம் எடுப்பார்.

அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு நைட் பார்ட்டி வைத்து சிறப்பாக கவனிக்கிறாராம் வாரிசு. அதில் குஷியாகிப்போன ஹீரோக்கள் மதி மயங்கி போய் இருக்கின்றனர்.

அதனாலேயே சமீபத்தில் அந்த டாப் ஹீரோ உடனே நடிகையின் கால்ஷீட்டை வாங்கி இருக்கிறார். அதே சூட்டோடு அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார் என்கிறது திரையுலக வட்டாரம்.

Trending News