வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பெரிய இடத்துப் பிள்ளையை வளைத்துப் போட்ட வாரிசு நடிகை.. சத்தமின்றி நடக்கும் கல்யாண ஏற்பாடு

வாரிசு நடிகையை பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. நம்பர் ஒன் ஹீரோயினாக இருந்த அம்மாவுக்கு தப்பாமல் தற்போது வாரிசும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

சமீபத்தில் கூட பான் இந்தியா நடிகருடன் அவர் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் நடிகை இந்த வாய்ப்புக்காக சில பல வேலைகள் செய்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அதையெல்லாம் கண்டுக்காத நடிகை தன் காதலருடன் டேட்டிங், ரொமான்ஸ் என ஜாலிபண்ணி வந்தார். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றுவது மீடியா கண்களில் பட்டு வைரலானது.

அதன் பிறகு முழுக்க நனைந்த பின் முக்காடு எதுக்கு என நடிகையும் சுதந்திரமாக வலம் வந்தார். இப்போது பார்த்தால் நடிகை தன் காதலரை திருமணம் செய்யவே முடிவெடுத்து விட்டாராம்.

இதற்கு முக்கிய காரணம் அவர் பெரிய இடத்துப் பிள்ளை என்பதுதான். அதனாலேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என அவர் துடித்து வருகிறாராம்.

அதற்கு நடிகையின் தரப்பில் சம்மதமும் கிடைத்து விட தற்போது வேலைகள் அனைத்தும் சத்தம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. விரைவில் நடிகை கல்யாண இன்விடேஷனை எடுத்து நீட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது திரையுலக வட்டாரம்.

Trending News