திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

என்ன மீறி யாரு வாங்குறான்னு பாக்கலாம்.. உதயநிதியிடம் சரண்டர் ஆன வாரிசு படக்குழு

உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை விநியோகம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து மற்ற தயாரிப்பாளர்கள் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். ஏனென்றால் உதயநிதியிடம் கணக்கு வழக்கு எல்லாம் சரியாக இருப்பதாலும், பிரச்சனை இல்லாமல் படத்தை வெளியிடலாம் என எல்லா பட தயாரிப்பாளர்களும் இவரை தான் அணுகுகிறார்கள்.

அதுமட்டுமன்றி மற்ற தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் பணத்தை கொடுக்க இழுத்தடிப்பார்கள். ஆனால் உதயநிதி உடனுக்குடன் பணத்தை செட்டில் செய்து விடுகிறாராம். இந்த சூழலில் தற்போது அஜித்தின் துணிவு படத்தை உதயநிதி வெளியிட உள்ளார்.

Also Read : வெளியிலிருந்து சும்மா கேனத்தனமா உளரக் கூடாது.. டென்ஷனாகி உதயநிதி கொடுத்த பதிலடி

ஆனால் துணிவு படத்திற்கு போட்டியாக வெளியாகும் விஜயின் வாரிசு படத்தை லலித் வெளியிடுவதாக கூறப்பட்டது. ஆகையால் தமிழ்நாட்டில் துணிவு படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் வாரிசு படத்தை உதயநிதியை மீறி யாரும் வாங்க வரவில்லையாம்.

ஆகையால் சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்று வட்டாரங்களில் உள்ள திரையரங்குகளில் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதியை பெற்றுக் கொள்ளுமாறு வாரிசு படக்குழு சரண்டர் அடைந்துள்ளது. எனவே இந்த இடங்களில் உதயநிதி தான் வாரிசு படத்தை வெளியிட உள்ளார்.

Also Read : துணிவால் உச்சகட்ட பயத்தில் இருக்கும் வாரிசு.. படத்தை ஓட்டியே ஆகவேண்டும் என விஜய் செய்த ராஜதந்திரம்

மேலும் தற்போது வரை துணிவு படத்திற்கு 800 திரையரங்குகளுக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் துணிவு படத்தை விட வாரிசுப் படத்திற்கு குறைவான தியேட்டர்கள் தான் ஒதுக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த இரு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

எனவே துணிவு மற்றும் வாரிசு படத்திற்கு எத்தனை திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் எந்தெந்த திரையரங்குகளில் எந்த படம் வெளியாகும் என்பது கூடிய விரைவில் தெரியவரும். மேலும் இப்போதே இந்த இரு படத்திற்கான வேலைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Also Read : ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்.. சொன்ன தேதியில் மோதிப் பார்க்க ரெடியான வாரிசு

Trending News