தளபதி தான் அடுத்த சூப்பர் ஸ்டாருனு எதுக்கு சொல்றாங்க.? ரகசியத்தை உடைத்த சுப்ரீம் ஸ்டார்

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். வம்சி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். குடும்ப சென்டிமென்ட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் விஜய்யை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை கூறியிருக்கிறார். அதாவது பல வருடங்களுக்கு முன்பே நான் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று கூறினேன். தற்போது அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பார்க்கும் போது அது உண்மையாகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி உங்கிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரியவம்சம். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 175 நாட்களைக் கடந்து ஓடியது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் அப்போது ஒரு விழாவும் நடத்தப்பட்டது. அந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சரத்குமார் இனிவரும் காலங்களில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

இதைப் பார்த்த பலரும் இப்போது நீங்கள் அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது வேறு ஒரு நடிகரை எப்படி நீங்கள் சூப்பர் ஸ்டார் என்று கூறலாம் என்று சரத்குமாரிடம் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அவரோ என் மனதில் பட்டதை தான் கூறினேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த சம்பவத்தை பற்றி பேசிய சரத்குமார் இந்திய அளவில் விஜய்க்கு நம்பர் ஒன் இடம் கிடைத்துள்ளது. இதுவே அவருக்கு இருக்கும் பிரபலத்தை தெளிவாக காட்டுகிறது. அதனால் அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.