வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் சாரை பார்த்து கத்துக்கோங்க.. மனைவியிடம் திட்டு வாங்கிய வாரிசு நடிகர்

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. அதேபோன்று விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு திரைப்படமும் குடும்ப ஆடியன்ஸை பெருமளவில் கவர்ந்துள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று குறைவில்லாமல் வசூல் ரீதியாக நல்ல கலெக்சனையே பார்த்து வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம் அஜித்தால் தன் மனைவியிடம் திட்டு வாங்கிய சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அதாவது அஜித்தின் மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளியில் தான் ஷாமின் குழந்தைகளும் படித்து வருகிறார்கள். அப்போது பள்ளியின் ஒரு விழாவிற்கு சென்ற ஷாமின் மனைவி அங்கு அஜித் வந்திருப்பதை பார்த்திருக்கிறார்.

Also read: சதுரங்க வேட்டை பாணியில் வினோத்துக்கு நடந்த அநியாயம்.. துணிவு உருவாக காரணம் இதுதான்

உடனே அவர் தன் கணவரிடம் சென்று அவ்வளவு பிஸியாக இருக்கும் அஜித் சாரே பொண்ணுக்காக ஸ்கூல் வரை வந்திருக்கிறார். அதுவும் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் ரொம்பவும் எளிமையாக வந்தார். ஆனால் நீங்கள் ஒரு முறை கூட வருவது கிடையாது என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன ஷாம் அடுத்த முறை பள்ளிக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு வந்திருந்த அஜித்தை பார்த்து பிரம்மித்து போன அவர், அவருடன் சில விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதாவது எப்படி அண்ணா நீங்க இவ்வளவு சிம்பிளா இருக்கிறீங்க, அதுவும் இந்த பிசியான வேலையில் ஸ்கூலுக்கு நீங்களே வந்து இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்.

Also read: விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. அதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்

உடனே அஜித் நமக்கு முதலில் குடும்பமும், பிள்ளைகளும் தான் முக்கியம் என்று சாதாரணமாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டு வியந்து போன ஷாம் அதன் பிறகு அடிக்கடி ஸ்கூலுக்கு சென்று வந்ததாக கூறியிருக்கிறார். மேலும் என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் அந்த பந்தா கொஞ்சம் கூட இல்லாமல் தன் மகளுக்காக எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் அஜித்தை பற்றி பெருமையாகவும் கூறி இருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பே கூட ஒருமுறை அஜித் ஸ்கூல் விழாவில் பங்கேற்று இருந்த வீடியோ வைரலானது. அது மட்டுமல்லாமல் பள்ளியில் எந்த விழாவாக இருந்தாலும் ஒரு சாதாரண பெற்றோர் போலவே அவர் அனைத்திலும் கலந்து கொள்வதும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Also read: இந்த 5 படங்களில் மொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்ட மஞ்சு வாரியர்.. நடிப்பு அரக்கனை மிஞ்சிய பச்சையம்மாள்

Trending News