வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுத்தியலுடன் சூறையாட வந்த வாரிசு பட போஸ்டர்.. கருப்பு உடையில் மிரட்டும் விஜய்

அனைவரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வரும் நேரத்தில் விஜய் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதனால் அவருடைய படம் வெளியாகும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி என சோசியல் மீடியாவில் கூறி வந்த நிலையில் வாரிசு பட போஸ்டர் வெளியாகி அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் பைலிங்குவல் திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

Also read:வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் கோவப்பட்ட விஜய்.. அதிரடியாக எடுத்த முடிவு

விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரிசு பட குழுவினர் ஒரு போஸ்டர் உடன் பட ரிலீஸ் பற்றி அறிவித்துள்ளனர். அந்த வகையில் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் எங்கும் வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது.

கருப்பு உடையில் மிரட்டும் விஜய்

varisu-vijay
varisu-vijay

அதிலும் அந்த போஸ்டரில் விஜய் கையில் சுத்தியலுடன் கருப்பு நிற உடையில் ஆக்ரோஷமாக இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை அதிக மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதால் இப்படம் குடும்பப் பின்னணியை கொண்ட திரைப்படம் என்று கூறப்பட்டது.

Also read:கம்மென்றும் உம்மென்றும் மாறிய வாரிசு படக்குழு.. சொந்தக்குரலில் பாடிய பாடலுக்காக விஜய் விட்ட டோஸ்

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டரை பார்க்கும் பொழுது வழக்கமாக விஜய் திரைப்படத்தில் இருக்கும் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த பொங்கல் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு திருவிழாவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரிலீஸ் நாளை அறிவித்து விட்ட நிலையில் பட குழு தற்போது மிகுந்த பரபரப்புடன் இறுதி கட்ட வேலைகளை பார்த்து வருகிறது. மேலும் படத்தின் டிரைலர் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Also read:விஜய்யின் கேரியரை உயர்த்திய விக்ரமன்.. கிளைமாக்ஸை மாற்றியதால் படம் ஹாட்ரிக்

Trending News