புதன்கிழமை, ஜனவரி 8, 2025

விஜய்யின் வாரிசு நஷ்டமா.? கேம் சேஞ்சர் படத்துக்காக காத்திருக்கும் தில் ராஜு சொன்ன அந்த வார்த்தை

Game Changer: பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜூ, விஜய் வைத்து வாரிசு படத்தை தயாரித்திருந்தார். கடந்த 2023 பொங்கலுக்கு இப்படம் வெளியானது.

வணிக ரீதியாக இப்படம் முதலுக்கு மோசம் இல்லாமல் தப்பித்தது. ஆனால் கலவையான விமர்சனங்கள் பின்னடைவை ஏற்படுத்தியது.

அதிலும் இப்படம் அஜித்தின் துணிவுடன் மோதியதால் நெகட்டிவ் விமர்சனங்கள் கூட கிடைத்தது. இரு படங்களில் துணிவு தான் வெற்றிகொடியை தக்க வைத்தது.

ஆனால் தயாரிப்பாளர் படம் லாபம் என்று தான் தெரிவித்திருந்தார். அதை அடுத்து இப்போது அவர் தயாரித்துள்ள கேம் சேஞ்சர் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.

விஜய்யின் வாரிசு நஷ்டமா.?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள இப்படத்திற்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால் இந்தியன் 2 தோல்விக்கு பிறகு ஷங்கர் இப்படத்தை தான் நம்பி இருக்கிறார்.

படத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதை தொடர்ந்து ப்ரோமோஷன் கூட ஜோராக நடந்து வருகிறது.

இந்நிலையில் தில்ராஜு இப்படம் தான் எனக்கு ஒரு கம்பேக்காக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு இது எனக்கு வெற்றி படமாக அமையும் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அப்ப வாரிசு படம் தோல்வின்னு ஒத்துக்கிட்டீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தில்ராஜு தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை வாரிசு வொர்க் அவுட் ஆனது.

தெலுங்கில் டப்பிங் படம் போல் ஆகிவிட்டது என தெரிவித்திருந்தார். ஆனால் எந்த இடத்திலும் நஷ்டம் என்று சொல்லவில்லை. இருப்பினும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கேம் சேஞ்சர் என்னுடைய கம்பேக் என சொன்னது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News