திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சத்தமில்லால் அடி வாங்கிய விஜய் பட தயாரிப்பாளர்கள்.. அஜித் வைத்த ஆப்பு

கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்றால் அது நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் சும்மா இருந்தாலும், இவர்களுடைய ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இவர்கள் இருவரை சுற்றி தான் இருக்கிறது.

ஆனால் இவர்கள் இருவருமே எந்த போட்டியுமே இல்லை என்று பொதுவெளியில் காட்டிக்கொள்வார்கள். நடிகர் விஜய் இன்னும் ஒரு படி மேலே போய் சமீபத்தில் நடந்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவின்போது தனக்குப் போட்டி என்பது யாருமே இல்லை என்றும், எனக்கு நானே போட்டி என்றும் கூட சொல்லிக் கொண்டார்.

Also Read: விஜய் இடத்தை சல்லி சல்லியாக உடைக்கும் அஜித்.. அடுத்தடுத்து நடக்க போகும் எதிர்பாராத சம்பவங்கள்

ஆனால் சமீபத்தில் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த வாரிசு மற்றும் துணிவு போட்டியில் தான் யாருமே எதிர்பார்க்காத சில உண்மைகளும் வெளிவந்திருக்கிறது. உண்மையிலே வெற்றி பெற்றது யார் என்பதும் தெரிந்திருக்கிறது. இந்த உண்மையின் மூலம் தமிழ் சினிமாவில் இருந்த ஒரு மாய பிம்பமும் உடைந்து இருக்கிறது.

எந்த போட்டியும் இல்லாமல் தனிக்காட்டு ராஜா போல் சுற்றி வந்த தளபதி விஜய், அவருடைய படங்கள் ரிலீஸ் ஆகும்போது எல்லாம் வசூல் வேட்டை நடத்தினார். சமீபத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு படத்திலும் வசூல் சாதனை செய்திருந்தாலும், பல சோதனைகளையும் கடந்து தான் வந்தார்.

Also Read: அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

இந்த வகையில் வாரிசு படத்தின் வியாபாரத்தின் போதே, வெங்கடேஸ்வரா நிறுவன உரிமையாளர் தில் ராஜுவிடம் படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வாரிசு உடன் ரிலீசானால் விலை கம்மியாகவும், வாரிசு உடன் ரிலீஸ் ஆகவில்லை என்றால் விலை அதிகமாகவும் வாங்குவதாக தான் பேசி இருக்கிறார்கள்.

அதன்படி அஜித் படமும் சேர்ந்து ரிலீஸ் ஆனதால் பேசின விலையை விட கம்மியாகத்தான் வாரிசு படம் வியாபாரம் ஆகி இருக்கிறது. எப்படி பார்த்தாலும் வாரிசு வசூலை அள்ளினாலும் முந்தைய படங்களை ஒப்பிடும்போது அந்த வெற்றி இந்த படத்திற்கு இல்லை என்பது தான் உண்மை. மேலும் அஜித்தை விட விஜய் சினிமாவில் மேலே போய்விட்டார் என்ற மாய பிம்பமும் உடைந்து இருக்கிறது.

Also Read: உடல் எடை குறைக்க முடியாமல் திணறும் 5 ஹீரோக்கள்.. பல வருடங்கள் முயன்றும் தோற்றுப்போன அஜித்

Trending News