திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாரிசுக்கு வந்த நிலமை ஒரு காலமும் லியோவிற்கு வந்துவிடக்கூடாது.. கறாராக இருக்கும் தளபதி

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் தளபதி ரசிகர்களுக்கு மனநிறைவாக இருக்கவில்லை. ஏனென்றால் மாஸ் ஹீரோவாக பார்த்த விஜய்யை சென்டிமெண்ட் நாயகனாக பார்ப்பது அவர்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல அடுத்ததாக அவர் நடிக்கும் லியோ படத்திற்கு ஒரு காலமும் வாரிசு படத்தின் நிலமை வரக்கூடாது என விஜய் ஸ்டிட்டாக சொல்லிவிட்டார்.

வாரிசு படத்தை ஆந்திராவில் மிகவும் பாதுகாப்போடு தான் எடுக்கப்பட்டது. ஆனால் கடைசியில் அதில் உள்ள ஒரு காட்சி மொபைல் மூலம் வெளிவந்தது. இது அந்த சமயத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் விஜய் போன்றவர்களுக்கு மிகவும் சோதனையாக அமைந்தது.

Also Read: பண ஆசையா, இல்லை பதவி ஆசையா.. தளபதி விஜய் தேர்ந்தெடுக்க போகும் வழி?

அது மாதிரி லியோ படத்தில் நடக்கவே கூடாது என்ற கோணத்தில் விஜய் மிகவும் கடுமையாக இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் உத்தரவு போட்டுள்ளார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் காட்சிகள் எப்படி வெளி வருகிறது என்று யோசித்ததில், கூட இருக்கும் மற்ற நடிகர்களுக்கு பாதுகாப்பாக வருகின்ற ஜிம் பாய்ஸ் மூலம்தான் இது நடைபெறுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்.

இதனால் இவர்களை நன்றாக சோதனை செய்த பின்பு தான் அவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்க வேண்டும் மற்றும் மொபைல் போனை படப்பிடிப்பில் யாரும் பயன்படுத்தக்கூடாது. வரும் வழியிலேயே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என விஜய் கூறியுள்ளாராம்.

Also Read: கமல்,விஜய்யுமே இன்னும் வெயிட்டிங் லிஸ்ட் தான்.. அலட்சியம் செய்யும் தாடிக்கார இயக்குனர்

அதன்படி தற்பொழுது லியோ படத்தின் தயாரிப்பாளர் விஜய் சொன்னதை கேட்டு இந்த விஷயத்தில் கொஞ்சம் ஸ்ட்ரிட்டாகவே இருந்து வருகிறார்.  மீண்டும் ஒருமுறை வாரிசு படத்திற்கு நிகழ்ந்தது லியோ படத்திற்கு வந்தால் நிச்சயம் விஜய் இன்னும் கோபமாக மாறி என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாத அளவுக்கு தாண்டவம் ஆடுவார் என்று கூறப்படுகிறது.

எதற்காக மற்ற படங்களில் இல்லாத அக்கறை இந்த படத்திற்கு விஜய்க்கு என்று கேட்டால், இது வேறு ஒருவர் தயாரித்தாலும் இது விஜய் பணத்தில் உருவாகும் படம் தான். அதனால் லியோ மூலம் விஜய் பல கோடியை தட்டி தூக்க இன்னும் அடுத்தடுத்து நிறைய பிளான் போட்டு வைத்திருக்கிறாராம்.

Also Read: விஜய் பட ஹீரோயினை டார்கெட் செய்யும் ஹீரோ.. செண்டிமெண்டாக மூன்று படமும் செம ஹிட்

Trending News