திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கிய வாரிசு.. 3 நாள் பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய வசூல்

தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே வாரிசு, துணிவு திரைப்படங்களை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் இந்த இரண்டு படங்களிலும் எது மாஸ் என்கிற விவாதம் ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. அதில் இப்போதைய நிலவரப்படி வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபீசை மிரட்டும் அளவுக்கு வசூல் சாதனை புரிந்துள்ளது.

அதாவது வாரிசு படம் வெளியான முதல் நாளன்று ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. வம்சி இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். அதனாலேயே இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

Also read: அஜித்துக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த வாரிசு நடிகர்.. துணிவுக்கு நோ சொன்னதன் பின்னணி

ஆனால் படத்தை பார்த்த பலரும் இது மெகா சீரியல் என்றும் மொக்கையாக இருக்கிறது என்றும் கூறி வந்தனர். இதனால் வாரிசு திரைப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு கணிசமாக குறைந்தது. ஆனால் அதன் பிறகு வந்த அடுத்தடுத்த காட்சிகளுக்கான விமர்சனங்கள் படத்தை தூக்கி நிறுத்தியது. அதாவது குடும்பங்கள் கொண்டாடும் தரமான திரைப்படம் என்ற விமர்சனத்தை இப்படம் பெற்றது.

மேலும் படத்தைப் பார்த்த பேமிலி ஆடியன்ஸ் அனைவரும் தங்கள் வாழ்க்கையோடு இப்படம் கனெக்ட் ஆவதாக தெரிவித்தனர். இதன் மூலம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற ஆரம்பித்த வாரிசு இப்போது ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல இடங்களிலும் இப்படத்தைக் காண ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறதாம். அதிலும் தற்போது பொங்கல் விடுமுறை ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் இப்படத்திற்கான கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

Also read: கொழுந்துவிட்டு எரியும் வாரிசு, துணிவு விவகாரம்.. பகிரங்க மிரட்டல் விடுத்த ரெட் ஜெயிண்ட்

அந்த வகையில் வாரிசு திரைப்படம் வெளியான மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூல் பெற்று சாதனை படைத்திருக்கிறது. முதல் நாளிலேயே உலகம் முழுவதிலும் 50 கோடியை நெருங்கி இருந்த வாரிசு மூன்று நாட்களில் இவ்வளவு வசூலித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் சாதனை படைத்திருக்கும் விஜய்யை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படம் இன்று தெலுங்கில் வெளியாகி இருக்கிறது. அதற்கும் ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுத்து வருகின்றனர். இதனால் வாரிசு தற்போது பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை வகித்து வருகிறது.

Also read: லோகேஷ் கைவிட்ட வாரிசு நடிகர்.. டர்னிங் பாயிண்ட் என நினைத்து மொக்கை வாங்கிய ஹீரோ

Trending News