தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது. அதாவது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு மற்றும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான துணிவு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டது.
இந்த இரண்டு படங்களுமே வசூலை வாரி குவித்து வருகிறது. மேலும் படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்கள் தாண்டியும் திரையரங்குகளில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது கடந்த வாரம் திரையரங்குகளில் நிறைய புதிய படங்கள் வெளியானது.
Also Read : தளபதி 67 விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் இல்ல, த்ரிஷாவுக்கு அதைவிட ஸ்பெஷலாம்.. செம மேட்டரா இருக்கே!
ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு தான் அதிக திரையரங்குகள் தற்போது வரை ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாரிசு படம் 149 தியேட்டர்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டை பொறுத்தவரையில் துணிவு படத்திற்கு 130 தியேட்டர்கள் ஒதுக்கி உள்ளனர்.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ரன் பேபி ரன் படத்திற்கு 108 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. துணிவைக் காட்டிலும் மைக்கேல் படத்திற்கு 138 திரையரங்குகள் ஒதுக்கி இருந்தாலும் வசூலை பொருத்தவரையில் துணிவு படம் தான் அதிகம் பெற்றுள்ளது.
Also Read : 200 கோடி வசூலுக்கு முட்டி மோதும் துணிவு.. இதுவரை செய்யாத சாதனையை செய்து காட்டிய அஜித்
ஏனென்றால் மைக்கேல் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருவதால் ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க விரும்பவில்லை. கடைசியாக பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்திற்கு 40 திரையரங்குகளில் 145 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அடுத்தடுத்த புதிய படங்கள் வெளியானாலும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு தான் தற்போது வரை அதிக திரையரங்குகள் மற்றும் காட்சிகள் ஒதுக்கி வருகிறார்கள். இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள் அஜித் மற்றும் விஜய் என்பது தற்போது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

Also Read : கதை காப்பிக்கு கொடுத்த புது விளக்கம்.. விஜய், அஜித் இயக்குனர்களின் மாறுபட்ட சிந்தனை