கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இளம் இயக்குனர்களில் தன்னுடைய கதை திறமையால் அனைவரையும் கவர்ந்தவர் கார்த்திக் நரேன். அவருடைய முதல் படமான துருவங்கள் பதினாறு படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தை எடுத்தார். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரான கவுதம் மேனன் படத்தை பல சிக்கல்களில் மாட்டி விட்டதால் தற்போது வரை வெளிவராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அருண் விஜய் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் வெளியான மாபியா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் எப்படியாவது மீண்டும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என தனுஷுடன் D43 படத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தான் அவருக்கு ஒரு பாலிவுட் ஆப்பர் வந்துள்ளது. சமீபத்தில் துருவங்கள் பதினாறு படத்தை பார்த்த பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் வருண் தவான் அந்த படத்தை ரீமேக் செய்வேன் என அடம்பிடித்து கொண்டிருக்கிறாராம்.
துருவங்கள் பதினாறு படத்தின் ஒவ்வொரு நிமிடமும் மிக சுவாரசியமாக இருப்பதால் அந்த படம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டது எனவும், முடிந்தால் இந்த படத்தின் இந்தி ரீமேக்கை நீங்களே இயக்குங்கள் எனவும் கார்த்திக் நரேனிடம் கேட்டுள்ளாராம்.
இந்த கூட்டணி மட்டும் உறுதியானால் கண்டிப்பாக கார்த்திக் நரேன் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைப்பார். மிக இளம் வயதிலேயே தமிழில் இருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் என்ற பெருமையை கார்த்திக் நடையின் படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.