வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சமந்தா ஷூட்டிங் நடக்கும்போது oxygen tank பக்கத்துலயே இருக்கும்.. நடிக்கும்போதே கண்ணை மூடிவிட்டார்

சமீபத்தில் வெளியான சீட்டாடல் வெப் தொடரை பார்த்த ரசிகர்கள், “என்ன ஒரு நடிப்பு, அற்புதம் சம்மு” என பாராட்டி வருகிறார்கள். ஒரு பெண் குழந்தையை சமந்தா வளர்க்கும் விதம் பற்றி பலரும் பாராட்டுகிறார்கள். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே சமந்தா கஷ்டப்பட்டு இந்த தொடரில் நடித்துள்ளார்.

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வருண் தவான், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த Citadel: Honey Bunny வெப்தொடர் அமேசான் பிரைமில் ரிலீஸாகியுள்ளது. பல சவாலான ஆக்ஷன் காட்சிகளில் நடிகை சமந்தா தனது உடல் நிலை மோசமாக இருந்தபோதும், மனதைரியத்துடன் நடித்தார்.

அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தது வீண்போகவில்லை. இவர் நடிப்பால் கட்டிபோட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், சமந்தா பற்றிய ஒரு முக்கிய தகவலை வருண் தவான் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களுக்கு சமந்தா மீது மேலும் நன்மதிப்பை வர வைத்துள்ளது..

மயங்கி விழுந்துட்டாங்க!

இந்த வெப் தொடரில் நடிக்கும்போது, நான் சமந்தாவை நினைத்து கவலை படாத நாட்களே இல்லை. ஒரு நாள் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு நாள் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று கண்ணை மூடிவிட்டார். நான் மிகவும் பயந்து போய்விட்டேன். சுமார் இரண்டு மணிநேரம் கழித்து ஒரு ஆக்சிஜன் டேங்க் வந்தது.

“சமந்தா ஆக்சிஜன் எடுத்துக்கொண்ட பின், மீண்டும் சாதாரணமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிச் சென்றிருக்கலாம். ஆனால் சமந்தா அப்படி செய்யவில்லை. அவருடைய டெடிகேஷன் லெவல் பார்த்து நான் வியந்து போனேன்..”

“இன்னொரு ஒரு முறை, சைபீரியாவில் இருக்கும் ரயில் நிலையத்தில் நான் ஓட வேண்டும், சமந்தா என் பின்னால் ஓடி வர வேண்டும். நான் கேமராவை தாண்டி ஓடிவிட்டேன். ஆனால் சமந்தா ஃபிரேமில் இருந்தபோதே மயங்கி விழுந்துவிட்டார்.”

“நான் ஓடி சென்று தாங்கி பிடித்துவிட்டு பேக் அப் என்று சொன்னேன்.. ஆனால் இயக்குனர். அதெல்லாம் இல்லை, நீங்களே பாருங்கள், அவர் நோர்மலாக எழுந்து நடிப்பார்’ என்று கூறினார். சமந்தா ஒரு inspiration.. அவருடைய துன்பங்கள் முன்பெல்லாம், என் துன்பம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது..” என்று கூறியிருந்தார். வருண் தவான் சொன்ன இந்த தகவலை கேட்ட ரசிகர்களுக்கு சமந்தா மீது இன்னும் அதிக அன்பு ஏற்பட்டுள்ளது.

Trending News