விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 வில் பங்குபெற்ற 18 போட்டியாளர்களில் தெரிந்தும் முகங்களை விட தெரியாத முகங்கள் அதிகம். இந்நிகழ்ச்சியில் நாடக கலையில் இருந்து வந்தவர் தாமரை. ஆரம்பத்தில் இவர் ஓரிரு வாரங்களிலேயே எலிமினேட் ஆகி விடுவார் என பலரும் நினைத்தனர்.
ஆனால் போகப்போக இவருடைய குணம் பிடித்து கிட்டத்தட்ட பிக்பாஸ் இறுதி வாரத்திற்கு முதல் வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். ஒவ்வொரு சீசனிலும் இறுதி கட்டத்திற்கு செல்வதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்படும்.
அதேபோல் பிக் பாஸ் சீசன் 5 வில் பணப்பெட்டி வைக்கும் பொழுது தாமரை அதை எடுக்க மறுத்து விட்டார். 12 லட்சம் உடைய அந்த பணப்பெட்டியை தாமரை உங்களுக்கு வேண்டுமா எனக் கேட்ட பிறகுதான் சிபியும் எடுத்தார். இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தாமரை பண ரீதியாக கஷ்டத்தில் இருப்பது தெரியும்.
பிக்பாஸ் வீட்டில் தாமரையுடன் மிகுந்த பாசத்தில் உள்ளவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. இவர்கள் இருவரும் சேர்ந்து எலிமினேட் ஆகும்போது தாமரை மிகுந்த மன கஷ்டத்தில் இருந்தார். தற்போது தாமரைக்கு வருண் பிரிட்ஜ் மற்றும் மைக்ரோ ஓவன் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார்.
வருண் மிகப் பெரிய திரை குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் எந்த பந்தாவும் காட்டாமல் அனைவருடனும் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தார். வெளியுலகத்திற்காக சிலர் தங்கள் கொடுக்கும் பரிசுகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள்.
ஆனால் வருண் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பதைப் போல யாருக்கும் தெரியாமல் தாமரை வீட்டுக்கு சென்று அவருக்கு பரிசளித்துள்ளார். ஆனால் இது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா மூலியமாக அனைவருக்கும் தெரிந்துள்ளது.