வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ராக்கி திரைப்படத்தில் மிரட்டிய வசந்த் ரவி.. நிஜ வாழ்வில் எப்படிப்பட்டவர் தெரியுமா

தரமணி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் வசந்த் ரவி. அவர் முதல் படத்திலேயே தன்னுடைய அற்புதமான நடிப்பின் மூலம் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

அந்தப் படத்தை தொடர்ந்து அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து இயக்குனர் பாரதிராஜா, ரவீனா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. பழிவாங்கும் கதை அமைப்பைக் கொண்ட இந்தப் படத்தில் வரும் வசந்த் ரவியின் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் அவரின் நடிப்புத் திறமையை மிகவும் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் படத்தில் மிகவும் ஆக்ரோஷமாக ரத்தக்களறி ஆக நடித்திருக்கும் வசந்த் ரவி இயல்பிலே மிகவும் சாதுவானவர். மிகவும் சைலண்டாக இருக்கும் அவர் இந்த படத்தில் இவ்வளவு வயலெண்ட் ஆக நடித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதேபோன்று அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள மற்றொரு திரைப்படம் சாணி காகிதம். இயக்குனர் செல்வராகவன் முதன்முதலாக நடிப்பில் களமிறங்கியிருக்கும் இந்த திரைப்படமும் ஒரு பழிவாங்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குனர் தற்போது இயக்கியுள்ள ராக்கி திரைப்படத்தைப் போலவே இந்த திரைப்படத்திலும் நிறைய கொலைவெறி சம்பவங்கள் இருக்கிறது.

செல்வராகவன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. தற்போது ராக்கி திரைப்படம் அனைவரிடமும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால், சாணி காகிதம் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி வாகை சூடும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Trending News