புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

Aneethi Movie Review- ரத்தம் தெறிக்க சமூக அரசியலை தோலுரித்த வசந்தபாலனின் அநீதி.. தேருமா முழு விமர்சனம்?

Aneethi Movie Review: வசந்த பாலனின் முந்தைய படங்களைப் போல தான் இப்படத்திலும் முதலாளிகளால் உழைக்கும் வர்க்கத்தின் மீது இழைக்கப்படும் அநீதியை மையமாகக் கொண்டு அநீதி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது அநீதி படம்.

திரு என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். சிறு வயதிலேயே ஒரு கொடூர சம்பவத்தால் தந்தையை இழந்திருக்கிறார் திரு. இந்த பாதிப்பின் காரணமாக சில சமயங்களில் சைக்கோவாக நடந்து கொள்கிறார். இதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார். இவருடைய காதலியாக சுப்பு என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.

Also Read : சைக்கோ ஹீரோவாக அவதாரம் எடுத்த அர்ஜுன் தாஸ்.. கொலைவெறியுடன் வெளியான ட்ரெய்லர்

ஏழை குடும்பத்தில் பிறந்த சுப்பு, வயதான பாட்டி மட்டுமே இருக்கக்கூடிய ஒரு வீட்டில் வேலை பார்க்கிறார். பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு என்ன பிரச்சனை நடக்கிறது என்பதை படத்தில் வசந்த பாலன் காட்டியிருக்கிறார். அந்தச் சமயத்தில் டெலிவரிபாயாக இருக்கும் திருவுடன் சுப்புக்கு காதல் ஏற்படுகிறது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக சுப்பு வேலை செய்யும் வீட்டின் முதலாளியான பாட்டி திடீரென இறந்து விடுகிறார். இதை வெளிநாட்டில் இருக்கும் பாட்டியின் வாரிசுகள் இடம் சொல்ல முடியாத சூழ்நிலை அப்போது ஏற்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் உள்ள பிண அறையில் பாட்டியின் பிரேதம் வைக்கப்பட்டிருக்கிறது.

Also Read : தியேட்டரை மிஸ் செய்த 5 ஹிட் படங்கள்.. கல்நெஞ்சையும் கரைய செய்த ஜெய் பீம்

அந்தச் சமயத்தில் எதர்ச்சியாக பாட்டியின் வாரிசுகளான வனிதா விஜயகுமார் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் வருகிறார்கள். பாட்டி இறந்த விஷயம் கேட்டு இது எதர்ச்சியாக நடந்தது இல்லை கொலை என அவர்கள் முடிவுக்கு வருகிறார்கள். அந்தப் பழி சுப்பு மற்றும் திரு மேல் விழுகிறது. அதன் பிறகு இந்த பிரச்சனையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் அநீதி.

பணக்கார வர்க்கம் எப்போதுமே ஏழைகள் மீது சுமத்தப்படும் சமூக அநீதியை இப்படம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. படத்தில் பல காட்சிகளில் அர்ஜுன் தாஸ் சைக்கோவாக ரத்த கலரி போல் திரிகிறார். மேலும் துஷாரா விஜயின் நடிப்பு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. ஜிவி பிரகாஷின் பாடல், இசை நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி மற்றும் பாட்டியின் வாரிசுகள் செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.5/5

Trending News