திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வெங்கட் பிரபு விஜய்க்கு கொடுக்கும் 3.5 நிமிட பேர்வெல் பார்ட்டி.. மெய்சிலிர்த்து தளபதி போட்ட குத்தாட்டம்

வெங்கட் பிரபு இயக்கும் கோட் படம், மற்றும் விஜய் 69 இவற்றோடு சினிமா கேரியருக்கு விஜய் எண்டு கார்டு போடுகிறார். அதுவும் வெங்கட் பிரபு இதற்கு மேல் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடையாது. அதனால் இந்த படத்திலேயே தளபதியை செம்மையாய் கவனித்து அனுப்பி விட வேண்டும் என பல சர்ப்ரைஸ்கள் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

கோட் படம் சுமார் 2 மணி நேரம் 55 நிமிடம். எப்படி பார்த்தாலும் படம் பார்க்க போனால் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். இந்தப் படம் முடிந்த பிறகு விஜய்க்கு, வெங்கட் பிரபு ஒரு பெரிய ட்ரீட் கொடுக்கவிருக்கிறார். விஜய்க்கு தெரியாமல் சில சுவாரசியங்களை தொகுத்து வைத்திருக்கிறார்.

எப்பொழுதுமே வெங்கட் பிரபு தன்னுடைய ஸ்டைலில் படம் முடிந்த பிறகு, அந்த படத்தின் மேக்கிங் வீடியோக்களை போட்டு அசத்துவார். ஏற்கனவே பிரியாணி, சென்னை 600028, மங்காத்தா போன்ற படம் முடிவில் அந்த படத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை திரையில் போட்டு காண்பிப்பார்.

மெய்சிலிர்த்து தளபதி போட்ட குத்தாட்டம்

இதே போல் கோட் படம் முடிந்த பிறகு, இந்த படத்தின் மேக்கிங் வீடியோக்களை போடா திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அதில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தன்னையே மறந்து விஜய் செய்த பல சுவாரசியமான விஷயங்கள், போட்ட குத்தாட்டம் போன்றவற்றை தொகுத்து வைத்திருக்கிறாராம் வெங்கட் பிரபு.

திரைக்குப் பின்னால் பிரசாந்த், பிரபுதேவா, விஜய் பல லூட்டிகள் அடித்துள்ளனர். இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு 3.5 நிமிடங்கள் மேக்கிங் வீடியோவாக வெங்கட் பிரபு தயாரித்து வைத்திருக்கிறார. இதுதான் அவர் விஜய்க்கு கொடுக்கப் போகும் ஃபேர்வெல் பார்ட்டியாம். இனிமேல் விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை.

Trending News