வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஜெயிலுக்கு போன வேதவல்லி, எழிலுக்கு வரும் பிரச்சினை.. பெரியப்பா சதியில் சிக்கிய கயல்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில் வேதவல்லி, ஜூஸில் விஷம் கலந்த விஷயம் கயல் மூலமாக அனைவருக்கும் தெரிந்து விட்டது. அதாவது தன் மகள் அன்புவை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் அதை ஏற்றுக் கொள்ள முடியாத வேதவல்லி அன்புவை ஒரேடியாக இல்லாமல் ஆக்கி விட வேண்டும் என்று கயல் நிச்சயதார்த்தத்துக்கு வந்தார்.

வந்த இடத்தில் ஜூஸில் விஷம் கலந்து அதை அன்புக்கு கொடுப்பதற்கு பிளான் பண்ணி விட்டார். ஆனால் அந்த ஜூஸ் எதேர்ச்சியாக கயலின் அம்மா குடித்துவிட்டு ரத்த வாந்தி எடுத்து விட்டார். இதனால் நிச்சயதார்த்தம் முடிந்த கையுடன் மயங்கி விழுந்த கயல் அம்மாவை அனைவரும் சேர்ந்து மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள்.

எழில் மூலமாக கயலுக்கு குடைச்சல் கொடுக்கும் பெரியப்பா

அங்கே சிகிச்சை பெற்று வரும் காமாட்சி நினைத்து ஒட்டுமொத்த குடும்பமும் அழுது மன வேதனையில் தவிக்கிறார்கள். இந்த சமயத்தில் எழில், யாரோ நம்முடைய நிச்சயதார்த்தம் நடக்க கூடாது என்று இந்த மாதிரி ஒரு சதியை பண்ணி இருக்கிறார் என்று சொல்லிவிட்டார். உடனே கயலுக்கு, பெரியப்பா மற்றும் வடிவு மீது சந்தேகம் வந்துவிட்டது.

ஆனால் அதற்குள் ஷாலினி அம்மா வேதவல்லி தேவை இல்லாமல் பேசி மொத்த பழியையும் தூக்கி பெரியப்பா மேல் போட்டதால் கயலுக்கு வேதவல்லி மேல் சந்தேகம் திரும்பி விட்டது. உடனே கயல், வேதவல்லியை டார்கெட் பண்ணி நீ தான் இதெல்லாம் பண்ணி இருப்பாய். உனக்கு எங்க அம்மாவும், நாங்களும் என்ன கெடுதல் நினைத்தோம்.

அவர்களை போய் இப்படி ஒரு அவஸ்தைக்கு ஆளாக்கி விட்டாயே. உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா என்று கேள்வி கேட்கிறார். அப்பொழுது வேதவல்லியின் மகன் எங்க அம்மா ஏன் இதெல்லாம் பண்ணனும், தேவை இல்லாமல் அவர்கள் மீது பழி சுமத்தாதீர்கள் என்று கோபப்படுகிறார். அப்பொழுது கயல், இந்த வேதவல்லி தான் பண்ணியிருக்கணும்.

ஏனென்றால் கோவிலில் வைத்து ஷாலினி மற்றும் பவித்ரா சொன்ன விஷயங்கள் அப்படி என்று கோவிலில் நடந்த விஷயத்தை பற்றி விளக்குகிறார். இதை தெரிந்ததும் கோபத்தில் கொந்தளித்த தேவி நீங்க தான் எங்க அம்மாவை இப்படி பண்ணினீர்களா என்று கேட்கிறார். அதற்கு உண்மை மறைக்க முடியாமல் வேதவல்லி ஆமா நான் தான் எல்லாத்தையும் பண்ணினேன்.

இந்த அன்புக்கு வச்ச குறியில் உங்க அம்மா வந்து சிக்கிக்கிட்டாங்க என்று உண்மையை ஒத்துக் கொண்டார். பிறகு செய்து தவறுக்கு தண்டனை கிடைக்கும் விதமாக போலீஸ் வந்து வேதவல்லியை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் விட்டார்கள். இதெல்லாம் முடிந்த பிறகு கயலின் அம்மா காமாட்சிக்கு நினைவு திரும்பிவிட்டது. எந்த பிரச்சினையும் இல்லாமல் பிழைத்து விட்டார்.

ஆனால் கயலுக்கு மறுபடியும் ஒரு பிரச்சினை வரும் விதமாக எழில் ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வது போல் கதை நகர்கிறது. ஆனால் எழிலுக்கு எந்த பிரச்சனையும் வரவிடாமல் கூடவே இருந்து நான் பாதுகாத்துக் கொள்வேன் என்று கயல் சொல்கிறார். ஆனால் கயலுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காக எழிலுக்கு பிரச்சனை கொடுப்பது பெரியப்பா செய்யும் சதியாக தான் இருக்கும்.

இருந்தாலும் கயல் இருக்கிற வரை எழிலுக்கும், எழில் இருக்கும் வரை கயலுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். ஆனால் இவர்களுடைய கல்யாணம் தான் எப்பொழுது என்று ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

கயில் சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News