ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

உங்களுக்கு எல்லாம் ரத்த வெறி பிடிச்சுருக்கா? NTR ரசிகர்களை வெளுத்து வாங்கிய வேதிகா

சமீபத்தில் கொடூரமான ஒரு செயலை, ஜூனியர் NTR ரசிகர்கள் செய்துள்ளனர். இது திரையுலகத்தில் ஒரு முகசுழிப்பை ஏற்படுத்தியதோடு, பலர் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், உலகளவில் 172 கோடி ரூபாய் முதல் நாள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடவுளுக்கு பலி கொடுப்பதற்க்கே பலர் இன்றளவும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், ரசிகர்கள் செய்த ஒரு வெறி செயல் மனதை படபடக்க செய்துள்ளது. இதெல்லாம் கொடூரம் என்பதை காட்டிலும், இவர்களுக்கு மூளை மழுங்கி போய் விட்டதா என்ற கேள்வியும் நமக்குள் வருகிறது.

ஆந்திராவில் ‘தேவரா’ படம் வெளியீட்டை முன்னிட்டு ஆடு ஒன்றை பலி கொடுத்து ஜூனியர் என்.டி.ஆர் போஸ்டரில் அதன் ரத்தத்தை தெளித்தார்கள். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. இதற்க்கு NTR ரசிகர்களே பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தான் நடிகை வேதிகாவும் இதை கண்டு, தனது கண்டனங்களையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை வேதிகா, “இது மிகவும் கொடூரமானது. இதை நிறுத்துங்கள். அந்தப் பாவப்பட்ட ஜீவனுக்காக எனது ரத்தம் சிந்துகிறது. இதற்கு யாரும் தகுதியானவர்கள் இல்லை. இது போன்ற சித்ரவதை யாருக்குமே நடக்கக்கூடாது. இது இறைவனின் காலடியில் தஞ்சம் அடையட்டும். ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிருங்கள். தயவு செய்து நிறுத்துங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக, பலர், “உங்களுக்கு எல்லாம் ரத்த வெறி பிடிச்சுருக்கா.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா.. உங்கள் கொண்டாட்டத்திருக்காக வாயில்லா ஜீவனை சித்திரவதை செய்யும் உங்களுக்கு இறைவன் தக்க தண்டனையை வழங்குவார் ” என்றும் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.

Trending News