சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வீரா சீரியலில் கார்த்திக் மூலம் கண்மணிக்கு வீரா வைத்த ஆப்பு.. மாறன் செய்த உதவியை மறந்து ஓவராக ஆடும் ராகவன்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில், ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ராகவனின் மனைவியாக ராமச்சந்திரன் வீட்டிற்கு மருமகளாக கண்மணி போயிருக்கிறார். அந்த வகையில் கண்மணி நல்லவள் என்று ராமச்சந்திரன் நம்பி கடையில் சில பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். அப்படி கடையில் இருக்கும் கண்மணி ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை பண்ணி ராமச்சந்திரன் குடும்பத்திற்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

இதை தெரிந்து கொண்ட வீரா, அக்காவை திருத்தி ஒரு நல்ல மருமகளாக வாழ வைக்க வேண்டும் என்று கண்மணி பற்றிய விஷயங்களை யாரிடமும் சொல்லாமல் மறைமுகமாக கண்மணியை திருத்துவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் கண்மணிக்கும் வீராவுக்கும் நேரடியாக பரமபதம் விளையாட்டு ஆரம்பித்து விட்டது. அதற்கு முதற்கட்டமாக ராமச்சந்திரன் கடையிலில் வேலை பார்த்த ஊழியரை கண்மணி பிளான் பண்ணி தூக்கி விட்டார்.

இதனை அடுத்து வீட்டிற்குள் ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக கார்த்திக்கிடம் பிசினஸுக்கு ஐடியா கொடுக்கிறேன் என்கிற பெயரில் சில அட்வைஸ்களை செய்தார். ஆனால் இது பிடிக்காத கார்த்திக், கண்மணியை வாய்க்கு வந்தபடி திட்டி அவமானப்படுத்தி விட்டார். சும்மாவே கண்மணிக்கு ஒரு சின்ன விஷயம் கிடைச்சால் போதும் அதை ஊதி ஊதி பெரிதாக்குவார்.

அப்படிப்பட்டவருக்கு தற்போது ஒரு தரமான செயல் கிடைத்திருக்கிறது என்றால் சும்மாவா விட்டு வைப்பார், அதற்கு ஏற்ற மாதிரி கார்த்திக் அவமானப்படுத்தியதை நினைத்து அழுது கொண்டே ராகவனிடம் பற்ற வைத்து விட்டார். உடனே ராகவன், மனைவிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கார்த்திகை கூப்பிட்டு திட்டி பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார்.

பிறகு அங்கே வந்த ராமச்சந்திரன், வீரா, மாறன் அனைவரும் சேர்ந்து என்ன பிரச்சனை என்று கேட்கும் பொழுது கார்த்திக் மீது தான் தவறு இருக்கிறது என்று ராமச்சந்திரன் மகனை திட்டி விடுகிறார். இதை பார்த்த கண்மணி, குடும்பத்திற்குள் ஒரு பிரச்சனை உருவாக ஆரம்பித்து விட்டது என்று சந்தோஷப்பட்டு கொள்கிறார். ஆனால் வீரா இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று சொல்லிய நிலையில் ராமச்சந்திரன் கார்த்திகை கடைக்கு வந்து வேலை பாரு கொஞ்ச நாளைக்கு என்று சொல்லிவிட்டார்.

இதை எதிர்பார்க்காத கண்மணி கொஞ்சம் ஏமாற்றம் அடைந்து விட்டார். அடுத்த நாள் ராமச்சந்திரன் சொன்னபடி கடைக்கு கார்த்திகை கூட்டிட்டு போகிறார். போனதும் அனைவரது முன்னிலையிலும் வைத்து இனி கார்த்திக் பொருள்களை வாங்கும் விஷயத்தை எடுத்துக் கொள்வார். விற்பனை செய்வதில் கண்மணி மற்றும் ராகவன் வேலை பார்க்கட்டும். வீரா மார்க்கெட்டிங், விளம்பரம், கணக்கு வழக்கு என அனைத்தையும் பார்க்கட்டும் என்று பிரித்து விடுகிறார்.

இதனால் ஏமாந்து போன கண்மணி என்னுடைய வீட்டுக்காரர் தான் பொருட்களை வாங்கும் விஷயத்தை இத்தனை நாளாக பார்த்துக் கொண்டிருந்தார் என்று ராமச்சந்திரனிடம் சொல்கிறார். ஆனால் ராமச்சந்திரன் பரவாயில்லை இந்த வேலை கார்த்திக்கு மட்டும்தான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி கண்மணி முகத்தில் கரியை பூசி விட்டார். இருந்தாலும் இந்த விஷயத்தை எல்லாம் வைத்து ராகவன் மனதில் விஷத்தை ஏற்றி குடும்பத்திற்குள் பிரச்சனையை உண்டாக்கும் விதமாக கண்மணி பிளான் பண்ணுவார்.

இந்த ராகவனும் மாறன் செய்த உதவி எல்லாம் மறந்துவிட்டு பொண்டாட்டி பேச்சு கேட்டு கொஞ்சம் ஓவராக தான் ஆடி வருகிறார். கண்மணி என்னதான் பிளான் போட்டாலும் வீரா இருக்கும் வரை ராமச்சந்திரன் குடும்பத்திற்கு எந்தவித ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வார்.

Trending News