வீரதீரசூரன் படம் ரெடியாகி ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. வேற லெவலில் விக்ரம் இதில் பட்டையை கிளப்பி இருக்கிறார். டீசர் வெளியாகி அனைவரையும் பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
தங்களான் படத்துக்குப் பிறகு விக்ரம் இதை பெரிதும் நம்பி இருக்கிறார். பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்பொழுது சந்தேகத்தை கிளம்பி உள்ளனர்.பொங்கலுக்கு விடாமுயற்சி, கேம் சேஞ்சர் வருவதால் இந்த படம் பின்வாங்குவது போல் தெரிகிறது.
வீரதீரசூரன் படத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு தியேட்டர்கள்தான் இப்பொழுது பிரச்சனையாக இருக்கிறது. இந்த படத்தையும், விடாமுயற்சியையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் தியேட்டர்களில் விநியோகம் செய்கிறது. இதுதான் இப்பொழுது பூதாகரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
வீரதீரசூரன் படத்தை ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டம் போட்டு வருகிறார்கள்.பொங்கலுக்கு எப்படி பார்த்தாலும் பத்து நாட்களுக்கு மேல் விடுமுறை இருக்கும். பொங்கல் தினம் செவ்வாய்க்கிழமை அன்று வருவதால் அதிக விடுமுறை கிடைக்கும்.
எப்படி பார்த்தாலும் ஏதாவது ஒரு படம் சொதப்பினால் கூட மற்ற படங்களுக்கு தோதுவாய் அமையும். இப்படி ஒரு சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு ஜனவரி 24 ரிலீஸ் செய்வது பெரிய பாதகமாய் அமையும். அதனால் வீரதீர சூரன் பட குழு கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும்