தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் வீரதீர சூரன். சமீபத்தில் அந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் என இரண்டுமே வெளியாகி அனைத்து தரப்பினரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. இப்படி காட்ட வேண்டிய விக்ரமை இவ்வளவு நாள் வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்துவிட்டனர் என ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
செம கெத்தாக வீரதீர சூரன் படத்தில் மிரட்டுகிறார் விக்ரம். தங்கலான் படத்தில் கோமணத்தை கட்டிட்டு வந்த விக்ரமை இப்படி பார்த்தவுடன் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள். பொங்கல் அன்று இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் இப்பொழுது ஜனவரி 24ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிப்பு வந்துள்ளது.
விடாமுயற்சி, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் பொங்கலுக்கு வெளிவருகிறது. அதனால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த படங்களை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்ய உள்ளது. இதனால் தான் குடியரசு தினத்திற்கு வெளியாக உள்ளது விக்ரமின் வீர தீர சூரன் படம்.
அதே நாளில் தான் முரளியின் மற்றொரு வாரிசான அதர்வா தம்பி ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படமும் வெளிவர இருக்கிறது. நேசிப்பாயா என பெயரிடப்பட்ட அந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார். கிட்டதட்ட 3 வருடங்களாக இந்த படம் எடுத்து வருகிறார்.
அதர்வா தம்பி ஆகாஷ் முரளி, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளைத்தான் திருமணம் செய்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பதும் அவரது மாமனார் சேவியர் தான். மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் இப்பொழுது முடிவடைந்து விட்டது. ஜனவரி 24 ரிலீஸ் ஆக உள்ளது.