வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

முதல் மனைவியை விவாகரத்து செய்த அஜித் பட நடிகர்.. 2-வது திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சிறுத்தை சிவா. இவரது சகோதரர் தான் நடிகர் பாலா என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். நடிகர் பாலா கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான அன்பு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதேபோல் இவருக்கும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே தனது கவனத்தை மலையாள சினிமா பக்கம் திருப்பினார். மலையாள சினிமாவில் நடிகர் பாலாவிற்கு ஓரளவிற்கு மார்க்கெட் உள்ளது.

இந்நிலையில் தான் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அண்ணனும், இயக்குனருமான சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படம் மூலமாக பாலா தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக பாலா நடித்திருந்தார். இருப்பினும் பாலா தற்போது மலையாள படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பாலா, டாக்டர் எலிசபெத் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

bala-ajith
bala-ajith

நடிகர் பாலா கடந்த 2010ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இந்நிலையில் தான் பாலா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

bala-ajith
bala-ajith

Trending News