சன் டிவியின் டிஆர்பி யில் ஒரு முக்கியமான பங்கை எதிர்நீச்சல் சீரியல் தான் தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அதில் நடிக்கும் நடிகர்களுக்கு வேறு எதிலும் கிடைக்காத அளவுக்கு சம்பளம் கொட்டி கொடுக்கப்படுகிறது. அந்த அளவிற்கு இல்லத்தரசிகள் மனம் கவர்ந்த ஒரு சீரியல் ஆக இருந்து வருகிறது.
ஏற்கனவே இந்த சீரியலில் நடித்து வந்தவர் இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பு காரணமாக இவர் இறந்துவிட்டார் அதன்பின் தற்போது இந்த சீரியலில் அவரது கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி.
வேலா ராமமூர்த்திக்கு தமிழ் படங்களில் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. வருடத்திற்கு 15 படங்கள் ரிலீஸ் ஆனால் எப்படியும் இவர் 8 முதல் 10 படங்களில் நடித்து விடுவார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் லைம் லைட்டில் இருந்தவர் ராமமூர்த்தி. இப்பொழுது அவருக்கு வெள்ளி திரையில் நடிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.
சினிமாவுக்கு குட் பை சொன்ன வேலராமமூர்த்தி
மதயானைக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த வேலா ராமமூர்த்தி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அடித்து தூள் கிளப்பும் ஒரு அற்புதமான நடிகர். இவருக்கு முதுகெலும்பாய் இருந்த படங்கள்,
கொம்பன்
கிடாரி (2016)
சேதுபதி (2016)
நம்ம வீட்டு பிள்ளை
தொண்டன் (2017)
எதிர்நீச்சல் சீரியலுக்கு குணசேகரன் கதாபாத்திரத்தில் செம பிஸி. ஒரு நாள் நடிப்பதற்கு 40 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார். இந்த 4 படங்களில் இவருக்கு வாய்ப்பு வந்தும் இவரால் நடிக்க முடியவில்லையாம்,
பி டி சார்
அரண்மனை 4
சாமானியன்
எலக்சன்
இதனால் இப்பொழுது இவரை வெள்ளித்திரை பக்கம் பார்க்க முடியவில்லை. 5 படங்களில் சம்பாதிப்பதை குறைந்த நேரத்தில் ரெண்டே எபிசோடுகளில் சம்பாதித்து விடுகிறார். ஒரு கதாபாத்திரம் செய்தாலும் தரமாக செய்து விட வேண்டும் என்பதில் தெள்ளத் தெளிவாக உள்ளார் வேல ராமமூர்த்தி. ஆனால் ரசிகர்களுக்கு கிடாரியை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது.