சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

எதிர்நீச்சல் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வாங்கும் சம்பளம்.. தெனாவட்டு காட்டும் வேல ராமமூர்த்தி

Ethir Neechal Gunaseekaran : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் சமீபகாலமாக டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வந்தது. இதற்கு முக்கிய காரணம் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து தான். திடீரென அவருடைய இறப்பு எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இதைத்தொடர்ந்து ஆதி குணசேகரனாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் சினிமாவில் வில்லனாக நடித்து வந்த வேல ராமமூர்த்தி இப்போது ஆதிகுணசேகரனாக நடித்து வருகிறார். மேலும் இவர் குணசேகரனாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதை ஓரளவு வேலராமமூர்த்தி பூர்த்தி செய்து வருகிறார்.

மேலும் இந்த தொடரில் ஒப்பந்தமாவதற்கு முன்பாக வேல ராமமூர்த்தி பல படங்களில் கமிட்டாகி இருந்தார். அதனால் தான் எதிர்நீச்சல் தொடரில் ஒப்பந்தமாக கூட இழுத்தடித்து கொண்டிருந்தார். மேலும் இப்போது ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி இருந்துள்ளார்.

Also Read : கதையே இல்லாமல் உருட்டும் எதிர்நீச்சல் சீரியல்.. ஹனிமூன் மாதிரி ஜெயிலுக்கு போகும் குணசேகரன்

ஆனால் எதிர்நீச்சல் தொடரால் இப்போது அதில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏனென்றால் படங்களில் அவருக்கு சம்பளம் மிகவும் குறைவு தான். மேலும் எதிர்நீச்சல் தொடரில் மாதத்திற்கு வேலராமமூர்த்தி 10 லட்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் வரை வாங்கி வருகிறாராம்.

ஆகையால் தான் இப்போது ஓவர் தெனாவெட்டு காட்டி வருகிறாராம். தனக்கு வரும் பட வாய்ப்புகள் எல்லாவற்றையுமே நிராகரித்துக் கொண்டிருக்கிறார். சுக்கிர திசை அடித்தது போல் மாரிமுத்துவின் இறப்பினால் இப்போது வேல ராமமூர்த்திக்கு எதிர்நீச்சல் என்ற மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்திருக்கிறது.

Also Read : பிரேம் டைமில் கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி சேனல்.. எதிர்நீச்சல் காலை வாரி விட்டாலும் கெத்தா இருக்கும் சீரியல்

Trending News