திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

மாஸ் என்ட்ரி கொடுத்த வேலு, மிரண்டு போன ஆனந்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே சீரியல்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

நேற்றைய எபிசோடில் ஆனந்தி மற்றும் அன்பு பரபரப்பாக அம்மாவின் செயினை தேடும் வேளையில் ஈடுபட்டிருந்தார்கள்.

அதே நேரத்தில் குற்றவாளி யார் என்றும் கண்டுபிடித்து விட்டார்கள். குற்றவாளியை கையும் களவுமாக பிடிக்க ஆனந்தி போட்டோ திட்டத்தின் படி அன்பு நடந்து கொண்டிருக்கிறான்.

இன்னொரு பக்கம் ஆனந்தியின் அப்பாவுக்கு வார்டன் போன் பண்ணி நானும் மகேஷ் உங்க வீட்டுக்கு வந்து முக்கியமான விஷயம் பேசப்போகிறோம் என சொல்கிறார்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோ மொபைல் ஆனந்தி செயின் கொள்ளையர்களிடம் சிக்கிக்கொண்டது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அந்த இடத்திற்கு அன்பு வந்து அவர்களுடன் சண்டையிடுகிறான். ஒரு கட்டத்தில் அந்த கொள்ளையர்கள் அன்பு வை பிடித்துக் கொண்டு கத்தியால் குத்த முயற்சி செய்கிறார்கள்.

என்ன செய்வது என்று அன்பு மற்றும் ஆனந்தி இருவருமே திகைத்து கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஆனந்தியின் அண்ணன் வேலு மாசாக என்ட்ரி கொடுக்கிறான்.

அடுத்த வாரம் ஒரு அதிரடி ஆக்சன் பிளாக் சீரியலில் இருப்பது இப்போதே தெரிந்து விட்டது.

Trending News