ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

மணமேடையில் அடாவடி செய்த வெண்பா.. தலைகுனிந்த காதலன்

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் இரண்டு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் பாரதியை 10 வருடங்களாக அவருடைய மனைவியிடம் இருந்து பிரித்து வைத்து, எப்படியாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும் என படு கேவலமான வேலைகளை வில்லி வெண்பா செய்தாலும், கடைசியில் பாரதி வெண்பாவை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என தெளிவாக சொல்லிவிட்டார்.

இதனால் வெண்பாவின் அம்மா ரோஹித் என்பவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து, அவருடன் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்கின்றனர். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில், வெண்பா மேடையில் இருந்து எழுந்து, ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்

‘அனாதை மாதிரி இருக்கிற ரோஹித்தை திருமணம் செய்து கொள்ள முடியாது. நல்ல பெரிய குடும்பத்தில் இருக்குற மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொண்டு வாழ விரும்புகிறேன்’ என காதலன் ரோஹித்தை சபையில் வைத்து வெண்பா கேவலப்படுத்துகிறார்கள்.

தலைகுனிந்து நிற்கின்ற காதலன் ரோஹித் வெண்பாவின் பேச்சால் அவமானப்பட்டு நிற்கிறார். உடனே சௌந்தர்யா ரோஹித்திற்க்கு சாதகமாகப் பேசி, மேடையில் ஏறி ரோஹித்தின் குடும்பம்தான் நாங்கள் அனைவரும் என சௌந்தர்யா, பாரதி, கண்ணம்மா, அகிலன் என அனைவரும் ரோஹித்தை உறவாக ஏற்றுக் கொண்டனர்.

இதன் பிறகு பதில் பேச முடியாத வெண்பா அமைதியாக அமர்ந்து விடுகிறார். ஒருவழியாக ரோஹித்-வெண்பா இருவரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது. பாரதிகண்ணம்மா சீரியலில் இவ்வளவு நாள் ஆட்டம் போட்ட வெண்பாவின் வில்லத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் சௌந்தர்யா.

மேலும் சௌந்தர்யாவின் கணவர் வேணுவுக்கு ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் ரத்த வாந்தி எடுக்கும் விசயத்தையும் சௌந்தர்யா தெரிந்து கொள்கிறார். இப்படிப் பரபரப்பான நிகழ்வுகள் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பாகிறது.

Trending News