சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கல்யாணத்துக்கு தயாராகிய வெண்பா.. கிளைமாக்ஸை நோக்கி பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான பாரதி கண்ணம்மா தொடர் கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தொடரில் தற்போது ரோகித்தை வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க வெண்பாவின் அம்மா முடிவு செய்துள்ளார். ஆனால் பாரதியை தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் வெண்பா உறுதியாக இருக்கிறார்.

மேலும் தனது அம்மாவுக்காக வெண்பா தற்போது ரோகித்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பது போல் நடிக்கிறார். மறுபக்கம் ஹேமா தன்னுடைய அம்மா யார் என்பதை கேட்டு பாரதியிடம் நச்சரிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் பாரதி ஹேமாவிடம் உன்னுடைய அம்மா, அப்பா யார் என்பது எங்கள் யாருக்குமே தெரியாது என கூறுகிறார்.

Also Read :ஜிபி முத்துக்கு பிடித்த விஜய் டிவியின் செல்லப்பிள்ளை.. இவர பிடிக்காத ஆளே இல்ல

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹேமா மயங்கி விழுகிறார். மேலும் இங்கு வெண்பாவுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது. ஆனால் பாரதி டிஎன்ஏ டெஸ்டில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தனது குழந்தைகள் என தெரிந்து விட்டால் வெண்பாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்ற முடிவில் உள்ளார்.

டிஎன்ஏ டெஸ்ட் நாளை மாலை தான் வரும் என்று டாக்டர் கூறுகிறார். ஆனால் காலையிலேயே வெண்பா திருமணம் நடக்க உள்ளது. மேலும் இந்த திருமணத்திற்கு கண்ணம்மா மற்றும் பாரதி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் வந்துள்ளனர். ஆனால் வெண்பா மனதில் ஏதோ ஒரு திட்டத்தை வைத்துள்ளார்.

Also Read :சித்ரா வழக்கில் சிக்கும் விஜய் டிவியின் லவர் பாய்.. பலரின் முகத்திரையை கிழிப்பேன் என ஹேமநாத் அதிரடி

அதாவது வெண்பா தனது கழுத்தில் பாரதியை தான் தாலிகட்ட வைக்க வேண்டும் என்று திட்டம் திட்டி உள்ளார். அதேபோல் வேறு வழி இல்லாமல் பாரதியும் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள மேடை ஏற உள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு ட்விஸ்ட் ஏற்பட உள்ளது.

அதாவது பாரதிக்கு தன் குழந்தைகள் தான் ஹேமா மற்றும் லட்சுமி என்ற உண்மை திருமண மேடையிலேயே தெரிய உள்ளது. இதனால் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு அவரை ஏற்றுக் கொள்ள உள்ளார். வேறு வலியில்லாமல் வெண்பா ரோஹித்தை திருமணம் செய்து கொள்வார்.

Also Read :இவிங்க பைத்தியமா இல்ல நம்மள பைத்தியமா ஆக்குறாங்களா.. பாரதி மாமா டவுசர் கிழிஞ்சுடுச்சே!

Trending News