சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிளாக்மெல் செய்த வெண்பா.. வேறு வழியில்லாமல் பாரதி எடுக்கும் முடிவு

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பத்து வருடங்களாக பாரதியை நம்ப வைத்து ஏமாற்றி கொண்டிருக்கும் வெண்பா, அவரை தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து வாழ விடாமல் வைத்திருக்கிறார்.

இதனால், தனக்கு குழந்தை பிறப்பதற்கு தகுதி இல்லை என நினைத்து கண்ணம்மாவை இத்தனை வருடங்களாக பாரதி சந்தேகப்பட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் வெண்பா, பாரதியிடம் ஒரு உதவியாக தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பாவாக இருக்க சொல்கிறார்.

Also Read: மானங்கெட்ட வேலையை பார்த்த வெண்பா.. கூடவே போகும் முட்டாள் பாரதி

வெண்பாவுக்கு ரோஹித் உடன் ஏற்கனவே நிச்சயம் ஆன நிலையில், அவருடன் குடிபோதையில் செய்த தவறினால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். மனதில் பாரதியை நினைத்துக்கொண்டு ரோஹித்துடன் வாழ முடியாது என்பதனால் வயிற்றில் வளரும் குழந்தையை பகடைக்காயாக பயன்படுத்த போகிறார்.

இந்தக் குழந்தையை காரணம்காட்டி பாரதியை பிளாக்மெயில் செய்து, தன்னுடைய கழுத்தில் தாலிகட்ட வைக்க பார்க்கிறார். ஆனால் இதற்கு மசியாத பாரதியை, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பிளாக்மெயில் செய்கிறார்.

Also Read: ஈகோவை விட்டு இறங்கி வந்த பாரதி.. இப்பயாவது ஒரு எண்டு கார்டு போடுங்கப்பா

வெண்பாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பதைபதைத்துக் கொண்டு ஓடி வரும் பாரதி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு பாரதியை எப்படியோ பேசி பேசி கரைத்துவிடும் வெண்பா, அவரை தன்னுடைய கழுத்தில் தாலி கட்ட வைக்கப் போகிறார்.

இப்படி கதையை எங்கெங்கேயோ மாற்றி மாற்றி இடியாப்பச் சிக்கலை போட்டுவிடும் பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனரை சோசியல் மீடியாவில் சின்னத்திரை ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

Trending News