சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மண்டபத்திலிருந்து பாதியிலேயே எஸ்கேப் ஆன வெண்பா.. உச்சகட்ட பரபரப்பில் பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் தற்போது கிளைமாக்ஸ்சை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதாவது வெண்பாவுக்கு ரோஹித்துடன் திருமண ஏற்பாட்டை வெண்பாவின் அம்மா ஷர்மிளா செய்துள்ளார். மேலும் மண்டபத்திற்கு விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் எல்லோரும் வந்துள்ளனர்.

இந்த சூழலில் மணமேடையில் மகிழ்ச்சியாக இருந்த வெண்பா புடவை மாற்ற ரூமுக்குள் சென்றுள்ளார். அப்போது சௌந்தர்யாவிடம் கண்ணம்மா ரூமுக்கு போன வெண்பா வரமாட்டா, இந்த கல்யாணம் நடக்காது பாருங்க அத்தை என கூறுகிறார். அவர் சொன்னதுக்கு ஏற்றார் வெண்பா மண்டபத்தில் இருந்து எஸ்கேப் ஆகி உள்ளார்.

Also Read :பணம், புகழை விட எனக்கு இதுதான் முக்கியம்…. சாப்பிடாமல் அடம் பிடித்து வெளியேறிய ஜிபி முத்து

மேலும் வெண்பா தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு கோவிலில் பாரதியை திருமணம் செய்து கொள்வதற்காக விரைந்து செல்கிறார். பாரதியும் அங்கு காத்திருக்கிறார். இவ்வாறு உச்சகட்ட பரபரப்பில் பாரதி கண்ணம்மா தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மேலும் பாரதியுடன் வெண்பாவிற்கு திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் நாளே டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்திருக்கும் என்பதால் பாரதிக்கு லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் தன்னுடைய குழந்தைகள் என்பது தெரிய வந்திருக்கும்.

Also Read :வில்லி அவதாரம் எடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமியில் எதிர்பாராத ட்விஸ்ட்

அதே நேரத்தில் கண்ணம்மாவை எப்படி எதிர்கொள்வது என்ற நிரடலில் பாரதி தவித்து வருகிறார். இந்த சூழலில் வெண்பாவை காணவில்லை என்று மண்டபத்தில் பரபரப்பாக உள்ள நிலையில் பாரதி வெண்பாவை அழைத்து கொண்டு மண்டபத்திற்கு வருவார்.

அங்கு உள்ளவர்களிடம் எல்லா உண்மையும் சொல்லி கண்ணம்மா லக்ஷ்மி, ஹேமா மூவரையும் பாரதி ஏற்றுக்கொள்ள உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் வெண்பாவின் சுயரூபம் அறிந்த பாரதி ரோகித்துடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார். இதனால் இந்த வாரம் எபிசோட் விறுவிறுப்பாக வரவுள்ளது.

Also Read :தாமரை இடத்தை பிடிக்க நினைத்தவருக்கு ஆப்படித்த ஆண்டவர்.. முதலாவதாக கெட் அவுட்டான போட்டியாளர்

Trending News