தமிழ் சினிமாவில் பல நடன இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் பல படங்களில் பாடல்களுக்கு ஓரமாக நடனமாடி உள்ளனர். பல வருடங்கள் பிறகு ஏதாவது ஒரு படத்தில் கோரியோகிராபர் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்த பிறகு தான் சினிமாவில் நடன இயக்குனராக ஒரு அங்கீகாரம் பெறுவார்கள்.
அந்தவகையில் ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது நடன இயக்குனராக கலக்கி வருபவர் தான் கல்யாண் மாஸ்டர். இவர் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
கல்யாண் மாஸ்டர் பொருத்தவரை அனைத்து பாடல்களிலும் ஓவராக வளைவு, நெளிவு இல்லாமல் எளிமையான முறையில் நடிகர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்து அந்த பாடலை வெற்றிபெற செய்வது இவருடைய பிளஸ் என கூறலாம்.
1987ஆம் ஆண்டு பெயர் சொல்லும் பிள்ளை படத்தில் ஒரு பாடலுக்கு பின்னாடியில் பலருடன் நடனமாடி இருப்பார். அதேபோல் 1998-ஆம் ஆண்டு பாட்ஷா படத்தில் ஆட்டோகாரன் பாட்டிற்கு பின்னாடி நடனமாடி இருப்பார். அதன் பிறகு உயிரோடு உயிரோடு எனும் படத்தில் முதன்முதலாக நடன இயக்குனராக அறிமுகமாயினர்.
2001 ஆம் ஆண்டு வத்திக்குச்சி பத்திக்காதுடா எனும் அஜித் பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி மிகவும் பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு வேற லெவல் சென்று விட்டார். வத்தி குத்தியை பத்த வைகற ஸ்டைல் முதற்கொண்டு இவர்தான் சொல்லி கொடுத்ததாம். கல்யாண மாஸ்டருக்கு சினிமாவில் இரு தூண்கள் என்றால் அது வெங்கட்பிரபு மற்றும் செல்வராகவன் எனக் கூறலாம்.
அதிகமாக வெங்கட்பிரபு மற்றும் செல்வராகவன் படத்தில் ஏதாவது ஒரு பாடலுக்காகவது பணியாற்றி விடுவார். தற்போது வரை தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.