சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

யோவ் முதல்ல படம் பார்த்துட்டு பேசு.. ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய வெங்கட்பிரபு.

எப்போதுமே எந்தப் படம் வெளியானாலும் அந்த படத்தை எப்படி தப்பாக சொல்வது என யோசிக்கும் ப்ளூ சட்டை மாறனை, வெங்கட்பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் செமையாக கலாய்த்து உள்ளது ரசிகர்களிடையே செம வரவேற்பு பெற்று, அந்த வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு கடைசியாக மங்காத்தா என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அதன் பிறகு அவர் எடுத்த எந்த படமும் வெற்றியைப் பெறவில்லை. இத்தனைக்கும் சூர்யாவை வைத்து மாஸ் என்ற படத்தை கொடுத்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டிய நிலைமை.

இந்த நேரத்தில்தான் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து மாநாடு என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து சினிமாவில் தங்களுடைய அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். பார்த்தவர்கள் அனைவருமே மாநாடு படத்தை கொண்டாடித் தீர்த்து விட்டனர் என்று சொன்னால் மிகையில்லை.

இப்படி இருக்கையில் எப்பவும் போல் ப்ளூ சட்டை மாறன் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்தை தன்னுடைய பேட்டி ஒன்றில் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இதைப்பார்த்த வெங்கட்பிரபு அவர் படம் பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை, வேறு யாராவது சொல்வதைக் கேட்டு ரிவ்யூ பண்ணி விட்டார் போல.

கதை என்ன என்பதே தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார் எனக் கூறியுள்ளார். மேலும் இனிமேலாவது ஒரு படம் வெளியானால் அந்த படத்தை பார்த்து விட்டு விமர்சனம் செய்யவும் எனவும் ஒரு குட்டு வைத்துள்ளார். இப்போது அனைவரது எதிர்பார்ப்பும் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏற்கனவே உருவாகி ரிலீஸாக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் பார்ட்டி படத்தை  எதிர் நோக்கித்தான்.

Trending News