புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறிய பரிதாபம்.. அப்பா மீது உச்சக்கட்ட கடுப்பில் வெங்கட் பிரபு

நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அது வேறொன்றுமில்லை வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அந்த படத்தில் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள் என்று ஒரு வதந்தி காட்டுத் தீ போல் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தது.

விசாரித்ததில் இது முழுக்க முழுக்க தவறாக பரப்பப்பட்ட வதந்தி. அப்படி ஒரு படத்தை வெங்கட் பிரபு யோசிக்கவே இல்லையாம். ஆனால் இந்த நியூஸை வெளியிட்டது ஒரு பெரும்புள்ளி. அவர் வெளியிட்டதால் தான் இந்த நியூஸ் உண்மை என்று எல்லா பக்கமும் சென்றடைந்தது. அதை தல தளபதி ரசிகர்களும் நம்பி விட்டனர். இந்த செய்தி வெங்கட்பிரபுவின் காதுக்கு எட்டி உள்ளது.

அதாவது ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு விஜய்-அஜித் இருவரும் சேர்ந்து எந்த திரைப்படத்திலும் இதுவரை நடிக்காததால், வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்-விஜய் சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

இது தவறான வதந்தி என வெளியில் சொல்ல முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் இப்பொழுது எங்கே போவதென்று முழித்துக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு. அப்பா நல்லது செய்ய ஆசைப்பட்டு இப்படி செய்து விட்டாரா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறிய கதையாய் இதுவே இப்பொழுது வெங்கட் பிரபுவிற்கு நெகட்டிவாக அமைந்துள்ளது.

இதனால் தவறான புரளியை கிளப்பி விட்டு சிக்கவைத்த அப்பா மீது வெங்கட் பிரபு கோபத்தில் இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் பின்னணி பாடகராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் இருப்பவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசிலாமணி போன்ற படங்களைக் கொடுத்து ரசிகர்களை ரசிக்க செய்தவர். அதிலும் தல அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாகும்.

ஏற்கனவே தல தளபதி ரசிகர்கள் விஜய்-அஜித் இருவரையும் ஒரே படத்தில் பார்க்க விரும்பி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வெங்கட் பிரபு அப்படி போன்ற படத்தை எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதும் குத்தாட்டம் போட்டனர். ஆனால் அவருடைய தந்தை இசையமைப்பாளரான கங்கை அமரன் தவறான செய்தியை பரப்பி விட்டதால் அந்தப் பொய்யை உண்மையாக்க முடியாமலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் பெரிய சிக்கலில் இயக்குனர் வெங்கட்பிரபு மாட்டியுள்ளார்.

Trending News