விஜய்யின் சினிமா காலகட்டம் முடிவடைய போகிறது. அதனால் அவர் நடிக்கும் படங்களுக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் கோட் படத்தை கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோட்டுக்கு 5000 என போட்ட பிள்ளையார் சுழி
கோட் படம் தமிழ்நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. உலக அளவில் 5000 தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது. விஜய் படத்திற்கு இப்படி ஒரு மாஸ் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. கேரளா, ஆந்திரா என அனைத்து இடங்களிலும் டிக்கெட் தீர்ந்து விட்டது.
எப்படியும் இந்த படம் முதல் நாளில் உலக அளவில் 100 கோடி வசூலை பெற்று விடும். ஒரு திரையரங்கிற்கு நான்கு காட்சி என்றால் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நாளில் 4000 காட்சிகளுக்கு மேல் ஓடும். அப்படி பார்த்தால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் 40 கோடிகள் எட்டிவிடும்.
வெங்கட் பிரபு மற்றும் கல்பாத்தி டீம் கோட் படம் 1000 கோடிகள் வசூல் செய்துவிடும் என எதிர்பார்த்து வருகின்றனர். கேரளாவில் மட்டும் முதல் நாள் வசூல் எப்படி பார்த்தாலும் 15 கோடிகளுக்கு மேல் பெற்றுவிடும். அங்கே கோபுரம் பிலிம்ஸ் இதை 720 திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.
இதே போல தான் யோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் ஆயிரம் கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் இரண்டாம் பாதி சொதப்பியதன் காரணமாக வசூல் குறைந்தது. லியோ பட தவறுகளிடமிருந்து வெங்கட் பிரபு நிறைய விஷயங்களை கற்றுள்ளார். அதை எல்லாம் சரி செய்து இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்தே சுவாரசியமாக கொடுத்திருக்கிறார்.
- கோட் சஸ்பென்சை உடைத்த வெங்கட் பிரபு
- வெங்கட் பிரபு படங்களில் இத கவனிச்சீங்களா.?
- விஜய்க்காக இறங்கி வேலை பார்த்த VP