வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெங்கட் பிரபு சூட்டிங் ஸ்பாட்டை அடித்து நொறுக்கி மக்கள்.. அக்கட தேசத்தில் செய்த சேட்டை

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சில காலங்கள் பிரேக் எடுத்திருந்த வெங்கட் பிரபு தற்போது அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். அவர் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தை பரபரப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்து வருகிறார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Also read : இயக்குனராக பயங்கர ஹிட் கொடுக்க ஆசைப்பட்ட பிரேம்ஜி.. காலை வாரிவிட்டு ரத்த சொந்தம்

அதாவது இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகா மாநிலத்தின் மாண்டியாவில் உள்ள மேலுகோட் பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு வரலாற்று புகழ் பெற்ற கோவிலும் இருக்கின்றது. அதற்கு அருகில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பட சூட்டிங்கிற்காக அங்கு மது கடை ஒன்றின் செட் போடப்பட்டு இருக்கிறது. அது புகழ்பெற்ற கோவில் என்பதால் அங்கு பக்தர்களின் கூட்டமும் எப்போதும் அலைமோதி கொண்டே இருக்கும். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அங்கு கோவிலுக்கு வந்த மக்கள் மது கடை செட் போடப்பட்டிருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Also read : வெங்கட்பிரபு தாராள மனசுக்கு வந்த தலைவலி.. இயக்குனர்கள் வயிற்றில் அடித்த பரிதாபம்

கோவிலுக்கு அருகில் இப்படி ஒரு செட் போட்டு ஷூட்டிங் நடத்தியதை கண்டித்து பொதுமக்கள் அங்கு போராட்டம் நடத்தி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் அந்த செட்டையே அடித்து உடைத்து துவம்சம் செய்திருக்கிறார்கள். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பட குழுவினர் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

அதன் பிறகு அவர்கள் அந்த செட்டை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் பொதுமக்கள் அங்கிருந்து சமாதானம் அடைந்து சென்றார்களாம். படப்பிடிப்பு நடத்த அங்கு அனுமதி வாங்கும் போது இது போன்று செட் அமைக்கப்படும் என்பதை தெரிவிக்காததால் தான் இப்படி ஒரு கலவரம் ஏற்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also read : அதிரடி ஆட்டத்திற்கு தயாரான விஜய்.. கேப்டனாக இருந்து வழிநடத்தும் வெங்கட் பிரபு

Trending News