வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதியை குஷி படுத்த 5 ஹீரோயின்களை களம் இறக்கும் வெங்கட் பிரபு.. மார்க்கெட் குறையாத லைலா

Venkat Prabhu In Thalapathy 68: சும்மா போற போக்குல ஒரு படத்தை எடுத்துட்டு போகலாம் என்று நினைக்கக் கூடியவர் தான் வெங்கட் பிரபு. அதற்கேற்ற மாதிரி அவர் இயக்கிய படங்கள் கேஷுவலாகவும், முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் பண்ணக்கூடிய விதமாகவும் தான் இருக்கும். அப்படிப்பட்ட இவருடன் முதல் முறையாக விஜய் கூட்டணி வைத்த படம் எப்படி இருக்க போகிறது என்ற ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் வெங்கட் பிரபு படங்கள் என்றால் எக்கச்சக்கமான நடிகர்கள் இருப்பார்கள் என்பதுதான் வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது தளபதி 68 படத்தில் எந்த அளவிற்கு பழைய நடிகர்களை கொண்டு வந்திருக்கிறாரோ, அதற்கேற்ற மாதிரி கிட்டத்தட்ட ஐந்து நடிகைகளையும் களம் இறக்கப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.

அந்த வகையில் பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக நடிகைகளை தொக்காக தூக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்து இவரை தவிர லைலா, சினேகா நடிக்கிறார்கள் என்று பட பூஜை நிகழ்ச்சியிலேயே உறுதி செய்து விட்டார்கள்.

Also read: தளபதி ஃபிட்னஸிற்கு இதுதான் காரணம்.. விஜய் என்றும் இளமையாக இருக்க கடைப்பிடிக்கும் 5 விஷயங்கள்

இந்நிலையில் இவர்களுக்கு அடுத்து இவானா நடிக்கப் போகிறார் என்ற பேச்சுக்கள் அடிபட்டது. அந்த வகையில் இந்த ஒரு விஷயம் சீக்ரெட் ஆகவே கொண்டு வரப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது இன்னொரு நடிகையும் இணைந்திருக்கிறார். காபி வித் காதல் படத்தின் மூலம் ஜீவாக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா சர்மா தளபதி 68 படத்தில் இணையப் போகிறார்.

ஆக மொத்தத்தில் தளபதி 68 படத்தில் 5 ஹீரோயின்களை வெங்கட் பிரபு கொண்டு வந்திருக்கிறார். விஜய் இதில் அப்பா மகன் என்று இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். இதில் மகன் கேரக்டருக்கு மீனாட்சி சவுத்ரி முடிவான நிலையில் அப்பா கேரக்டருக்கு ஜோடியாக எந்த நடிகையுடன் சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சினேகா விஜய் காம்பினேஷன் நன்றாக இருக்கும் என்பதால் இவர்களுக்கு முடிச்சு போட வாய்ப்பு இருக்கிறது.

அடுத்தபடியாக இதில் விஜய்க்கு தங்கையாகவும் ஒரு கேரக்டர் இருப்பதால் அந்த கேரக்டருக்கு எந்த நடிகை சூட்டாகும் என்று பார்த்தால் இவானா அல்லது மாளவிகா ஷர்மா கூட இருக்கலாம். இப்படி தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் இப்படத்தின் டைட்டிலை வருகிற புத்தாண்டுக்கு வெளியிடலாம் என்று பிளான் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

Also read: விஜய் மேல் விழுந்த மிகப்பெரிய கரும்புள்ளி.. ஒரே நாளில் கெட்ட பெயரை மாற்றிய தளபதி

Trending News