புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் ரேஞ்சுக்கு நீங்க மாறனும்.. 50 வயசு மாஸ் ஹீரோக்கு கண்டிஷன் போட்ட வெங்கட் பிரபு

Vijay-Venkat Prabhu: வெங்கட் பிரபு இப்போது பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். தளபதி 68 பூஜை சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்தடுத்த வேலைகளும் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. லியோ ரிலீஸுக்காக காத்திருக்கும் படகுழு அதன் பிறகு ஒவ்வொரு அப்டேட்டையும் வெளியிட இருக்கின்றனர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் முதல் கதை வரை அனைத்தும் சோசியல் மீடியாவில் கசிந்து வருகிறது. அதில் விஜய் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அதில் இளவயது விஜய்க்கு பிரபுதேவா மற்றும் பிரசாந்த் இருவரும் நண்பர்களாக நடிக்க உள்ளனர்.

அதில் பிரபு தேவா ஒல்லியான உடல் வாகு கொண்டவர் என்பதால் விஜய்யின் நண்பர் கேரக்டருக்கு செட் ஆகி விடுவார். ஆனால் பிரசாத் இப்போது அதிக எடை போட்டு கட்டுமஸ்தாக இருக்கிறார். அதனால் இந்த கேரக்டருக்கு அவர் செட்டாவதில் சிறு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதை அடுத்து விஜய் ரேஞ்சுக்கு அவர் உடலை குறைத்தே ஆக வேண்டும் என வெங்கட் பிரபு கண்டிஷனாக சொல்லிவிட்டாராம். தற்போது 50 வயதாகும் பிரஷாந்த் இனிமேல் உடல் எடையை குறைத்து வருவதெல்லாம் கஷ்டம் தான். அதனால் விஜய்க்கு செய்தது போல் இவருக்கும் டி ஏஜிங் செய்யப் போகிறார்களாம்.

சமீபத்தில் தான் விஜய் இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று வந்தார். ஏற்கனவே இளமையாக இருந்த அவர் யூத் ஆன கேரக்டர் என்பதால் இதை செய்ய வேண்டி இருந்தது. அதனாலேயே பிரசாந்த்தும் இப்போது விஜய் மாதிரி மாறுவதற்கு தயாராகி வருகிறார். அதற்காக மீண்டும் இப்போது படகுழு லாஸ் ஏஞ்சல்ஸ் பறக்க இருக்கிறார்கள்.

அந்த வகையில் தளபதி 68 இப்போதே ஒவ்வொரு சர்ப்ரைஸ் ஆக கொடுத்து வருகிறது. இதில் அதிகாரபூர்வமான அப்டேட்டும் வெளிவந்தால் சொல்லவே வேண்டாம். ஆக மொத்தம் லியோ திருவிழா முடிந்த கையோடு ரசிகர்கள் அடுத்த கொண்டாட்டத்திற்கும் தயாராகி விடுவார்கள். அதற்காகவே இப்போது தயாரிப்பு தரப்பு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News