அது எப்படி திமிங்கலம்.. கோட் படத்தில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள், வசமா சிக்கிய VP

GOAT: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோட் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் ஒன்பது மணிக்கு முதல் காட்சி ஆரம்பித்த நிலையில் மற்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே படம் திரையிடப்பட்டு விட்டது.

அதைத்தொடர்ந்து முதல் காட்சியை பார்த்த பலரும் தங்கள் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தனர். படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்களின் ஆரவாரமும் கொண்டாட்டமும் சற்று அதிகமாகவே இருந்தது.

அதேபோல் த்ரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும் படத்தில் பல சர்ப்ரைஸ் விஷயங்கள் இருந்ததும் ரசிகர்களை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறது.

அதனாலேயே தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். இப்படி கோட் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க படத்தில் வெங்கட் பிரபு செய்த சில தில்லாலங்கடி வேலைகளையும் ரசிகர்கள் புட்டு புட்டு வைத்து வருகின்றனர்.

எஸ்ஏசி படத்தை காப்பி அடித்ததில் தொடங்கி விஜயின் பழைய படங்களின் வசனங்கள் என புதுசா ஒன்னும் இல்லையா என கேட்க வைத்திருக்கிறது. அதிலும் சில இடங்களில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விஜய் ரசிகர்களே கதறி வருகின்றனர்.

கோட் படத்தின் மைனஸ்

அந்த வகையில் விஜய் ஒரு காட்சியில் வண்டி ஓட்டி வரும்போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தாவுவது போல் எடுக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் குருவி படத்திற்கு பிறகு இந்த காட்சி பங்கம் செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பறந்து பறந்து சண்டை போடுவது எல்லாம் என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. இதையெல்லாம் தாண்டி யுவன்சங்கர் ராஜா வேண்டா வெறுப்பாக பாடல்களை இசை அமைத்தது போல் இருக்கிறது.

ப்ரொடியூசர் அக்கா விஜயின் தீவிரமான ஃபேன் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது அவர் இதை கவனிக்கவில்லையா அல்லது வெங்கட் பிரபு கவனிக்க விடவில்லையா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஆக மொத்தம் பல கெஸ்ட் கதாபாத்திரங்களை வைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி விடலாம் என வெங்கட் பிரபு தப்பு கணக்கு போட்டு விட்டார். அதை தவிர படத்தில் புல்லரித்து போய் சொல்லும் படியாக எந்த காட்சிகளும் இல்லை என்பதுதான் நடுநிலையான விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

கோட் படத்தில் இருக்கும் லாஜிக் சொதப்பல்

Next Story

- Advertisement -