திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யால் குடியை மறந்த வெங்கட் பிரபு.. விக்னேஷ் சிவன் போல் தூக்கி எறிந்து விடுவார் என்ற பயம்.!

Actor Vijay and Director Venkat Prabhu: பொதுவாகவே வெங்கட் பிரபு படத்தை இயக்குவதில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறாரோ அதைவிட ஜாலியாக இருப்பது தான் முழு நேரமும் வேலையாக பார்க்கக் கூடியவர். அதிலும் இவரிடம் இருக்கும் டீமை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் அனைவரும் சேர்ந்து விட்டாலே தினமும் குஜாலாக தான் இருப்பார்கள். முக்கியமா 6 மணி ஆகிவிட்டது என்றாலே இவர்கள் அனைவரையும் பப்-பில் தான் பார்க்க முடியும்.

இப்படி சுற்றி திரிந்து கொண்டிருந்த வெங்கட் பிரபு திடீரென்று முற்றும் திறந்த முனிவராக மாறிவிட்டாராம். அதற்கு காரணம் விஜய் இவரிடம் கொடுத்த கால் சீட்டு தான். இப்படி ஒரு வாய்ப்பு நம்மை தேடி வரும் என்று எதிர்பார்க்காத வெங்கட் பிரபு, தற்போது பரபரப்பாக கதையை ரெடி பண்ணும் முயற்சியில் இறங்கி விட்டார்.

Also read: மொத்த ஆர்டிஸ்டையும் செலக்ட் பண்ணிய தளபதி 68.. அரசல் புரசலா வந்ததுக்கே வெங்கட் பிரபுவை வெளுத்து விட்ட விஜய்

அதற்காக வெளியில் கூட எங்கேயும் போகாமல் ஹோட்டலே கதி என்று அங்கேயே இருந்து இவர் ஏற்பாடு பண்ண குழு உடன் சேர்ந்து கதையை தயார் செய்வதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதனால் பப், பார்ட்டி, மது போன்ற அனைத்தையும் அறவே மறந்து விட்டார்.

அதற்கு காரணம் அஜித், விக்னேஷ் சிவனின் கதை சரியில்லாமலும், பொறுப்பு இல்லாமலும் இருந்ததால் இவரே ப்ராஜெக்ட் இல் இருந்து தூக்கி எறிந்து விட்டார். அதேபோல் நாமளும் சீரியஸாக இல்லை என்றால் அதே கதி தான் நமக்கும் ஆகிவிடும் என்ற பயத்தினாலே ரொம்ப பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Also read: 90% வெற்றி மற்றும் வெள்ளி விழா கொடுத்த இயக்குனர்.. 4 படங்களில் கேள்விக்குறியான அஜித் இயக்குனர்

இன்னும் சொல்ல போனால் தளபதி 68 படத்திற்கான கதை ரெடியாகவே இல்லை. முழு கதையும் எப்படி என்று விவாதங்கள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அத்துடன் விஜய் எப்பொழுது வேண்டுமானாலும் இவரை கூப்பிட்டு கதை தயாராக இருக்கிறதா, என்று கேட்டால் அதற்கு முழு ரெஸ்பான்சிபிலாக இருக்கணும் என்று முனைப்புடன் இருக்கிறார்.

அதே நேரத்தில் உலகம் சுற்றும் வாலிபராக அனைத்தையும் என்ஜாய் பண்ணிக்கொண்டு ஜாலியாக இருந்த வெங்கட் பிரபு, விஜய்யின் தளபதி 68 படத்துக்காக ரொம்ப சீரியசாக இருப்பது பலருக்கும் வியப்பாக இருக்கிறது.

Also read: தளபதியை பற்றி யாருக்கும் தெரியாத 6 விஷயம்.. அஜித், விஜய்க்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா.?

Trending News