வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் பயந்த மாதிரியே எல்லாம் நடந்தது.. வெந்த புண்ணில் வேல்-ஐ பாய்ச்சும் வெங்கட் பிரபு

Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணைகிறார். இருப்பினும் இதுவரை விஜய் திட்டமிட்டபடி எல்லாம் சென்ற நிலையில், இப்போது அவர் பயந்த மாதிரியே நடந்து விட்டது. தற்சமயம் விஜய் மனதில் ஆழமாக யோசிக்கும் ஒரே விஷயம் லியோ படத்தின் வியாபாரம் தான்.

இந்த படத்திற்கு எந்த ஒரு பின்னடைவும் வந்து விடக்கூடாது என மொத்த படக்குழுவும் ரகசியம் காத்து வருகின்றனர். கூடுதலாக லோகேஷும் எல்லா விஷயத்தையும் மிகவும் எச்சரிக்கையாக செய்து வருகிறார். அதேபோல் தளபதி 68 படத்தின் எல்லா விஷயத்தையும் விஜய் வெங்கட் பிரபுவிடம் மிகவும் சீக்ரட்டாக வைக்க சொல்லி இருக்கிறார்.

Also read: கொக்கு போல் காத்திருந்த சன் பிக்சர்ஸ்.. பட்ட நாமம் போட்ட விஜய், ஆஸ்தான தயாரிப்பாளருக்கு ஓகே சொன்ன தளபதி-69

ஆனால் தவளை தன் வாயாலே உளறுவது போல சமீபத்தில் அளிக்கும் பேட்டிகளில் வெங்கட் பிரபு இஷ்டத்திற்கு உளறிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் தளபதிக்கு சுத்தமாகவே பிடிக்காது. இதனால் விஜய் வெங்கட் பிரபுவை அழைத்து ஒவ்வொரு முறையும் வார்னிங் கொடுக்கிறார். ஆனால் அதையும் மீறி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்டேட் ஆக வந்து கொண்டே இருக்கிறது.

இப்படியே போனால் மொத்த விஷயமும் வெளிவரும் என்று விஜய் பயந்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா நடிக்கும் விஷயங்கள் வெளிவந்தது. இவர்களுடன் சினேகா, மாதவன், பிரியங்கா மோகன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்த தகவல் வெளியாகிறது.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

இதனால் விஜய் பெரிய அப்செட்டில் இருக்கிறார். ஏற்கனவே லியோ படத்தின் வியாபாரம் எப்படி ஆகுமோ என்ற பதட்டத்தில் இருக்கும் விஜய்க்கு வெங்கட் பிரபு செய்கிற செயல் வெந்த புண்ணில் வேல்-ஐ பாய்ச்சுவது போல இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே வழி சீக்கிரம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை துவங்குவது தான். அதற்காக இப்போது விஜய் வேக வேகமாக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறார்.

தளபதி 68 படத்தில் விஜய் தந்தை, மகன் என டபுள் ஆக்ஷனில் நடிக்க இருப்பதால் அதற்கான மேக்கப் டெஸ்ட், பாடி ஸ்கேனிங் ஆகியவை எடுப்பதற்காகவும் அமெரிக்கா சென்றிருந்தார். ஆனால் விஜய்க்கு பாடி ஸ்கேனிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் வெங்கட் பிரபு வெளியிட்டு அவரை கடுப்பேற்றினார். இதனால் விரைவில் இதன் படப்பிடிப்பையும் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

Also read: தளபதி 68ல் விஜய் தங்கச்சியாக சாய்சில் இருக்கும் 4 நடிகைகள்.. கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் சீக்ரெட்ஸ்

Trending News