Lokesh-Venkat Prabhu: விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ அடுத்த மாதம் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. இதோ அதோ என்று பல மாதங்களாக பலரையும் எதிர்பார்க்க வைத்த இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்.
இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் படம் எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ஏனென்றால் வெங்கட் பிரபு, சிம்புவை வைத்து இயக்கியிருந்த மாநாடு டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டு இருந்தது.
அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய்க்கான சம்பவத்திற்கு தயாராகும் வெங்கட் பிரபு தளபதி 68 படம் பற்றிய ஒரு குறிப்பை கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதன்படி அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கேற்றார் போல் உலக உருண்டை போன்றும் மிஷின் போன்றும் அந்த புகைப்படம் இருக்கிறது. அதனாலேயே இது சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. அப்படி மட்டும் இருந்து விட்டால் தளபதி 68 நிச்சயம் வேற லெவல் மாசாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Also read: லியோ கெஸ்ட் ரோலில் வரும் மலையாள பகவதி.. பால் பப்பாளியை முழு சோற்றில் மறைத்த லோகேஷ்
அந்த வகையில் இக்கதை டைம் மிஷின் பாணியில் எடுக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாகவே எதிர்காலத்தை பற்றிய ஒரு குறிப்பை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார். ஏற்கனவே தளபதி 68 கதையை பார்த்து பார்த்து செதுக்கி வரும் அவர் தற்போது லியோவை ஓரம் கட்டுவதற்கும் தயாராகி இருக்கிறார்.
லியோவை ஓரம் கட்ட வரும் தளபதி 68

ஏனென்றால் லோகேஷ் அந்த அளவுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை லியோ மீது உருவாக்கி வைத்திருக்கிறார். அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் வெங்கட் பிரபு தற்போது அட்டகாசமான ஒரு ஸ்கிரிப்ட்டுடன் களமிறங்கி இருப்பது சபாஷ் சரியான போட்டி என்று விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.
லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் வெங்கட் பிரபு
