வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

மங்காத்தா ஆடப்போகும் வெங்கட் பிரபு.. தனி ஒருவனாய் மோகன் ராஜா போடும் ஸ்கெட்ச்

கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு பிறகு சிவா, வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். முருகதாஸ் படமும் கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்து விட்டது.

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஆறு மாத காலம் இந்த படத்தின் சூட்டிங் நடக்கும். அதை முடித்துவிட்டு வெங்கட் பிரபு பெரிய சுறா ஒன்றுக்கு வலைவீசி காத்துக்கொண்டு இருக்கிறார்

விடாமுயற்சி, குட்பேட் அக்லி, படத்தின் ஷூட்டிங்கை டிசம்பர் இறுதிக்குள் முடித்துவிட்டு துபாய் கிளம்புகிறார் அஜித். ஜனவரி மாதம் 11-12 தேதிகளில் துபாயில் கார் பந்தயம் நடக்கிறது, அதில் கலந்து கொள்கிறார். 2025 ஆம் ஆண்டு பாதி வரை துபாயில் தான் இருக்கப் போகிறாராம்.

துபாயிலிருந்து அடுத்த அக்டோபர் மாதம்தான் அஜித் சென்னை திரும்புகிறார். அதற்கு பின்னர் தான்அவர்அடுத்த படங்களை பற்றி யோசிக்க போகிறாராம். ஏற்கனவே அவர் வரிசையில் சிறுத்தை சிவா, மோகன் ராஜா என பல இயக்குனர்கள் காத்திருக்கின்றார்கள். இதில் மோகன் ராஜா சொல்லிய ஒன்லைன் ஸ்டோரிக்கு அஜித் பச்சை கொடி காட்டி இருக்கிறார்.

அஜித் இப்பொழுது வெங்கட் பிரபுவிற்கு, தன் பர்சனல் போன் நம்பரை கொடுத்துள்ளாராம். இருவருக்கும் தொலைபேசி உரையாடல் நடந்து வருகிறது. மங்காத்தா படத்திற்குப் பிறகு இவர்கள் இன்று வரை இணையவில்லை. கூடிய விரைவில் அதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மோகன் ராஜா தான் முதலில் காத்திருக்கிறார்.

Trending News