கடைசியாக விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படம் கோட். இந்த படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்தார். படத்தின் பிரமோஷனுக்காகவும் முக்கிய பங்காற்றினார் அர்ச்சனா. இந்தப் படம் 452 கோடிகள் வசூலித்து வெற்றி படமாக அமைந்தது.
கோட் படம் முடிந்தவுடன் வெங்கட் பிரபு அந்த ப்ராஜெக்டிலிருந்து முற்றிலும் வெளிவந்து விட்டேன் என பிரமோஷன் சம்பந்தப்பட்ட வேளையில் இறங்கவில்லை. இதனால் ஏஜிஎஸ் தரப்பு அவர் மீது அதிருப்தியில் இருந்தது. இதன் காரணமாக வெற்றி விழாவில் வெங்கட் பிரபு கலந்து கொள்ளவில்லை. விஜய் மற்றும் அர்ச்சனா மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
கோட் படம் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் வேளையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் தயாரிப்பதாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இந்த படத்துக்கு பின்னர் ஏஜிஎஸ், வெங்கட் பிரபுவை கழட்டி விட்டது. படம் இயக்குவது மட்டும்தான் என்னுடைய வேலை என அவர் ஒதுங்கியது தான் இதற்கு காரணம்.
சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகப் போகும் படத்தையும் ஏஜிஎஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் வெங்கட் பிரபு நடந்து கொண்ட விதத்தால் இந்த ப்ராஜெக்ட் சத்யஜோதி கைவசம் மாறியுள்ளது. கூடிய விரைவில் இந்த கூட்டணியில் படம் ஆரம்பிக்க இருக்கின்றனர்.
வெங்கட் பிரபு அடுத்து பெரிய சுறா மீனுக்கு வலைவீசி காத்துக் கொண்டு இருக்கிறார். தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி போடுகிறார். இந்த ப்ராஜெக்ட்டுக்கு பின் அவர் அஜித்துடன் மீண்டும் இணைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.