திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

ஒரே பதிவில் காக்கா குஞ்சுகளை கதறவிட்ட வெங்கட் பிரபு.. இந்திய அணி வெற்றிக்கு இப்படி ஒரு காரணமா?

Venkat Prabhu: நேற்றைய தினம் உலக கோப்பை 2023 தொடரின் முதல் அரை இறுதி போட்டி நடைபெற்றது. இது மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டது. மேலும் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணி 327 ரன்கள் எடுத்த நிலையில் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று விட்டது. இந்த சூழலில் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்று போட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

rajini-word cup
rajini-word cup

அதாவது வெங்கட் பிரபு தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். பொதுவாகவே ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் தான் இப்போது போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்

Also Read : அஜித்துக்காக ஓடிவந்த ரஜினி.. கண்டும் காணாமல் கை கழுவிய விஜய்

இந்நிலையில் நேற்று ரஜினி இந்த கிரிக்கெட் மேட்சை பார்ப்பதற்கு தனது குடும்பத்துடன் வந்திருந்தார். ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த்தும் அவரது அருகில் இருந்தார். அந்த புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் இந்த மேட்ச் வெற்றி பெறுவதற்கு ரஜினியின் வருகை தான் முக்கிய காரணம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேட்சை பார்ப்பதற்கு குடும்பத்துடன் வந்த ரஜினி

world-cup-rajini
world-cup-rajini

மேலும் இந்த ஒரு ட்விட்டால் காக்கா குஞ்சுகளையும் கதற விட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. அதாவது ரஜினியின் இவ்வளவு தீவிர ரசிகராக இருக்கும் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து எப்படி படம் எடுப்பாரோ என்ற சந்தேகத்தை அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறார். வெங்கட் பிரபு ரஜினி ரசிகராக இருந்தாலும் தன்னுடைய வேலையில் சரியாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தளபதி 68 படம் தாறுமாறாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்மரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த படம் குறித்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : உஷாரா எஸ்கேப் ஆன ரஜினி.. மகளையே தள்ளி வைத்த தலைவர்

Trending News