திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அஜித் மூக்கை உடைக்க வேண்டும் என்று வெறியில் வெங்கட் பிரபு.. தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்படும்  கோட்

Venkat Prabhu in a frenzy to break Ajith’s nose: தமிழ் சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வளர்ந்து வரும் வெற்றி இயக்குனர் தான் வெங்கட் பிரபு. மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின் அவரின் படங்கள் சில, சரியாக போகவில்லை.

இந்த நேரத்தில் தான் தளபதி விஜய் ஜாலியாக ஒரு படம் பண்ணலாம் என்று வெங்கட் பிரபுவை செலக்ட் செய்து கால் சீட் கொடுத்தார். விஜய் கால் சீட் கொடுத்தவுடன்  விஜய்க்கு நெருக்கமானவர்கள் சிலர் தவறான முடிவு எடுத்து விட்டதாக வெங்கட் பிரபுவை பற்றி கொளுத்தி போட்டனர்.

வெங்கட் பிரபு விடம் சரக்கு தீர்ந்து போச்சு! விஜய் ஏன் அவருக்கு சான்ஸ் கொடுத்தார் என்று புலம்பி வருகிறது விஜய்க்கு நெருக்கமான நட்பு வட்டாரம்.

ஏற்கனவே இப்படித்தான் மங்காத்தா எடுக்கும் முன் அஜித்தை உசுப்பி விட்டனர்.  அஜித் வெங்கட் பிரபுவின் மீது இருந்த நம்பிக்கையினால் பலரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மங்காத்தா படத்தில் கமிட் ஆனார்.

மங்காத்தா ஒரு தரமான கேங்ஸ்டர் ஸ்டோரி ஆக வெற்றி நடைபோட்டது.  மங்காத்தாவை போன்று மீண்டும் ஒருமுறை தரமான கதையுடன் கூட்டணி சேர வேண்டும் என்பது வெங்கட் பிரபுவின் நீண்ட நாளைய கோரிக்கை.

ஆனால் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையாததால் அது இயலாமல் போனது. அஜித்திற்கான கதை ரெடி பண்ணி அஜித்தை அணுக முயன்ற போது அது நடைபெறாமல் போனதாக வருத்தப்பட்டார் வெங்கட் பிரபு.

இதனால் கோபம் கொண்ட வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தின் மூலம்  அஜித்திற்கு தரமான பதிலடி கொடுத்து அவரை வயிறு எரிய செய்யப் போவதாக தனது நெருங்கிய நட்பு வட்டாரத்திடம் கூறி வருகிறாராம்.

தமிழ் புத்தாண்டுக்கு வெளியான  கோட் படத்தின் விசில் போடு பாடல்

கோட் படம் சிறப்பாக அமைந்துள்ளது இதை கண்டிப்பாக அஜித்திடம் போட்டுக்  காட்டி மூக்கை உடைக்க வேண்டும் என்பது போன்ற  செல்ல வன்மத்துடன் சுற்றி வருகிறார்.

உண்மையாகவே வெங்கட் பிரபு மற்றும் அஜித்திற்கு இடையே ஒரு நல்ல பாண்டிங் இருக்கத்தான் செய்கிறது. வெங்கட் பிரபு கோட் படத்தை ஆரம்பிக்கும் போது வாழ்த்து கூறிய அஜித்திடம், தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரு வெற்றி முனைப்புடன் தனது நட்பு வட்டாரங்களில் இவ்வாறு புலம்பி வருகிறார் வெங்கட் பிரபு.

ஆனால் கோட் படத்தின் விசில் போடு பாடல் ரிலீஸ் ஆன போது மங்காத்தா அளவுக்கு வரவில்லை என்று ரசிகர்கள் சலித்துக் கொண்டனர். வெங்கட் பிரபு என்னவோ வெட்டி வீராப்பு, பந்தா காட்டி வருகிறார். ஆனால் கதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News