வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மன்மத ஆட்டத்திற்கு தயாராகும் வெங்கட் பிரபு.. மாநாடுக்கு பின் எகிறும் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி இன்று ஒரு வெற்றி இயக்குனராக வலம் வருபவர் நடிகர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 28 என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அந்தப் படத்தை தொடர்ந்து சரோஜா, மங்காத்தா, பிரியாணி என்று பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். தற்போது இவரின் இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

இப்படத்தில் வெங்கட் பிரபுவின் சிறப்பான திரைக்கதையை பிரபலங்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு அடுத்து வெங்கட் பிரபு எந்த மாதிரியான படத்தை இயக்குவார் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வெங்கட் பிரபு ஏற்கனவே மன்மத லீலை என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.

தெகிடி, வில்லா போன்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் கோவா பட பாணியில் சற்று கவர்ச்சி தூக்கலாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் பல நாட்கள் முன்பே எடுத்து முடிக்கப்பட்டு இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிக்க உள்ளார். அவர் மாநாடு திரைப்படத்தைப் போல மீண்டும் ஒரு அற்புதமான கதையை இயக்க இருக்கிறார். அந்த படத்திற்கு வி பி 10 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என்று அனைத்தும் முடிவு செய்யப்பட்டு படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஜெய், சிவா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள பார்ட்டி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

Trending News