தமிழ் சினிமாவில் இளைஞர் பட்டாளத்தை வைத்து ஜாலியாகவும், கலகலப்பாகவும் திரைப்படத்தை இயக்கி அதில் வெற்றி பெற்றவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரின் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படமும் இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் இவரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்து இருந்த அந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனால் வெங்கட் பிரபுவை தங்கள் படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மாநாடு திரைப்படத்திற்காக அவர் 4 கோடி சம்பளம் பேசி உள்ளார் ஆனால் கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக அவர் தனது சம்பளத்தை 30% வரை குறைத்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர் அடுத்ததாக இயக்க இருக்கும் தெலுங்கு படத்திற்கு அவர் 15 கோடி சம்பளம் பேசி உள்ளார். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் தயாராகவே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரின் கதை மேல் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
அதே போன்று தமிழில் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ஒரு முன்னணி தயாரிப்பாளர் ஏழு கோடி சம்பளம் பேசியுள்ளார். மாநாடு வெற்றிக்கு பிறகு அவர் தற்போது மன்மதலீலை திரைப்படத்தை இயக்கி முடித்து வெளியிட தயாராக இருக்கிறார். இந்த திரைப்படம் இளைஞர்களை கவரும் வகையில் சற்று தூக்கலான கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்களும் நிறைந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப் படத்திற்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வெங்கட்பிரபுவின் சம்பளம் இன்னும் கணிசமாக உயர்த்தப்படும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். மேலும் இவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.